நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள டிப் டாப் போலி போலீஸ் ஆசாமி!! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் போலி ஆசாமிக்கு
உடந்தையாக இருக்கும் திருப்பூர் மாவட்டம் காவல் துறை அதிகாரிகள்!?
நடவடிக்கை எடுப்பாரா டிஜிபி!?
காவல்துறை அதிகாரி என்று சொல்லிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பல லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி !! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் டிப் டாப் போலி ஆசாமிக்கு
உடந்தையாக இருக்கும் திருப்பூர் மாவட்டம் காவல் துறை அதிகாரிகள்!?
நடவடிக்கை எடுப்பாரா தமிழக டிஜிபி!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சரவண பெருமாள் என்ற வேல் சரவணன் என்ற நபர் தன்னை காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொள்ளும் டிப் டாப் போலி ஆசாமி வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி செய்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வந்துள்ளது!
இவர் தனக்கு நெருக்கமான காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அதன் பின்பு வேலை தேடும் நபர்களிடம் நானும் ஒரு காவல்துறை அதிகாரி தான் என்று அந்த புகைப்படத்தை காண்பித்து நம்ப வைக்கும் போலி ஆசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணி (OA)இருப்பதாகவும் 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை கொடுத்தால் அந்த பணி உங்களுக்கு வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பல லட்ச ரூபாய் நூதன மோசடி செய்து உள்ளதாக தகவல் வந்துள்ளது.
முக்கியமாக இந்த நபர் மதுரை விருதுநகர் ராநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வரும் இளைஞர்களை குறி வைத்து இந்த மோசடி வேலைகளை அரங்கேற்றி வந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.
காவல்துறை அதிகாரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போலி ஆசாமியிடம் பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்ட நபர் (பெயர் செல்வம் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் )ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிகை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு நூதன மோசடி செய்து வரும் போலி ஆசாமி சரவண பெருமாளை பற்றி பல திடுக்கிடும் தகவலை கூறினார்.
சரவண பெருமாளிடம் பணம் கொடுத்து எப்படி ஏமார்ந்ததைப் பற்றி விளக்கமாக கேட்டதற்கு பணம் கொடுத்து ஏமார்ந்த செல்வம் என்ற இளைஞர் கூறியது மிகவும் வியக்கத் தக்க வைத்தது.
பாதிக்கப்பட்ட நபர் கூறியது.
சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு விவசாய நிலத்திற்கு பட்டா வாங்குவதற்கு மனு கொடுக்க சென்றேன் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே நுழையும் போது ஜெராக்ஸ் டி டி பி எடுக்கும் கடையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது அருகில் டிப்டாப் பாக நின்றிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து என் பெயர் சரவண பெருமாள் என்று பேச்சு கொடுத்தார் .அப்போது என்னிடம் எதற்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டார் அதற்கு விவசாய நிலத்திற்கு பட்டா வாங்குவதற்காக வந்துள்ளேன் என்று கூறினேன் உடனே சரவண பெருமாள் நான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களுக்கு வேண்டும் என்றால் பட்டா கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்றும் அதற்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் நான் எங்கள் வக்கீல் மூலம் பட்டா வாங்கிக் கொள்கிறோம் என்று கூறியவுடன் சரி என்று சொன்ன டிப் டாப் காவல்துறை அதிகாரி என்று கூரிய போலி ஆசாமி சரவணன் பெருமாள் தொலைபேசி எண்ணை கொடுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று பல காவல்துறை அதிகாரிகளிடம் நின்றிருந்த புகைப்படங்களை காண்பித்தார்.அதன் பின்பு நான் சென்று விட்டேன் . அதன் பின்பு என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பட்டா வாங்கி விட்டீர்களா நான் வாங்கித் தருகிறேன் என்று மீண்டும் கேட்டார். இல்லை எங்களது வழக்கறிஞர் வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் என்று கூறிவிட்ட பின்பு அதன் பின்பு டிப் டாப் காவல்துறை அதிகாரி என்று கூறிய போலி ஆசாமி சரவண பெருமாள் தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் அவிநாசியில் வேலை செய்து கொண்டுள்ளேன் என்று கூறினேன் உடனே நான் அந்த ஏரியால்தான் இருக்கிறேன் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதற்கு சரி வாருங்கள் என்று சொன்ன. அடுத்த அரை மணி நேரத்தில் சரவண பெருமாள் அவிநாசியில் வேலை செய்யும் என்னுடைய கம்பெனிக்கு நேரில்வந்துவிட்டார். அதன் பின்பு என்னிடம் விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உதவியாளர் பணி இருப்பதாகவும் அதற்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த அரசு வேலை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்றும் கூறினார். அதற்கு என்னிடம் அவ்வளவு தொகை தற்போது இல்லை என்று கூறியவுடன் முதலில் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும் கொடுங்கள் மீதி தொகையை அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தவுடன் கொடுங்கள் என்று சொன்னதை நம்பி உடனே தன் வீட்டில் உள்ள மனைவியின் நகையை எடுத்து அடமானம் வைத்து 45 ஆயிரம் ரூபாயை போலி ஆசாமி சரவணப் பெருமாள் ஒரு Gpay நம்பரை கொடுத்து அனுப்பும் படி கூறினார். . உடனே அந்த நம்பருக்கு 45 ஆயிரம் ரூபாய்( ஈஸ்வரி என்ற பெயரில் சிட்டி யூனியன் வங்கி பல்லடம்)அனுப்பினேன் .அதன் பின்பு யாரோ ஒரு நபரின் பெயரில் உள்ள வேலைக்கான போலியான அரசு ஆணை நகலை அனுப்பினார்.உடனே என்ன சார் என் பெயர் செல்வம் வேறு பெயர் உள்ளது என்று கேட்டேன் உடனே சுதாரித்துக் கொண்ட போலி ஆசாமி சரவணப் பெருமாள் அப்படியா என்று மாற்றி வந்துவிட்டது இருங்கள் என்று கூறி விட்டு இன்று வரை வேலையும் வாங்கி தராமல் வாங்கிய பணத்தையும் தராமல் ஏமாற்றி வருகிறார் . இது சம்மந்தமாக அவினாசி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை டிப்டாப் போலி ஆசாமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நம்மிடம் பாதிக்கப்பட்ட செல்வம் கூறினார்.
அதன்பின்பு வேறு யாரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார் என்று கேட்டதற்கு மதுரையில் ஒரு பெண் வழக்கறிஞர் அவரது பெயர் கோடீஸ்வரி அவர்கள் உறவினர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் நம்மிடம் கூறினார்.
அதன் பின்பு அந்தப் பெண் வழக்கறிஞர் கோட்டிஸ்வரிடம் இது சம்பந்தமாக தொலைபேசியில் கேட்டபோது எப்படி ஏமாந்தீர்கள் என்று கேட்டதற்கு என்ன செய்வது சார் நம்புவது போல் கூறியதை நம்பி வேலை இல்லாத உறவினர்களிடம் சொன்னேன் அவர்களும் பணத்தை என்னை நம்பி பணம் கொடுத்தனர்.ஆனால் இதுவரை போலி ஆசாமி வேலையும் வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறினார். அதன் பின்பு ஏன் புகார் கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு இது சம்பந்தமாக பலமுறை பல்லடம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றதாகவும் ஆனால் பல்லடம் காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொள்ளாமல் மதுரை வங்கியிலிருந்து பணம் செலுத்தியதால் மதுரையில் உள்ள காவல் நிலையத்தில் தான் புகார் கொடுக்க வேண்டும் என்றும் கூறி விட்டார்கள் என்று அந்த பெண் வழக்கறிஞர் கூறினார்.
ஆனால் முன்னால் காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளிடமும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு நானும் ஒரு காவல் அதிகாரி என்று இந்த போலி ஆசாமி நம்ப நம்ப வைத்து நூதன மோசடி செய்து வருகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. இதற்க்கு பல காவல் துறை அதிகாரிகள் போலி ஆசாமி சாரவணப் பெருமாளுக்கு உதவி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தன்னை காவல் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த டிடாப் போலியா ஆசாமி நூதன மோசடி செய்து வருகிறார் என்று அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.
ஆனால் இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு நூதன மோசடி செய்த போலி ஆசாமி சரவணப் பெருமாள் whatsappல் தகவல் கொடுத்தும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது. அதன் பின்பு இந்த போலி ஆசாமி பற்றி விசாரித்த போது பழைய கார்களை வாங்கிக் கொடுக்கும் புரோக்கர் தொழில் செய்து வந்தவர் என்றும் அப்படி கார்கள் வாங்கிக் கொடுத்த போது பல காவல்துறை அதிகாரிகளின் நட்பு கிடைத்ததை வைத்து அவர்களுக்கு குறைந்த விலையில் கார் வாங்கிக் கொடுக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இதை நம்பி ஒரு சில காவல் துறை அதிகாரிகள் இந்த போலி ஆசாமியை நம்பி அவருக்கு உதவி செய்து வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என்று. கார் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர் தொழிலை மறைத்து காவல்துறை அதிகாரி என்று பல இளைஞர்களிடம் லட்ச்சக் கணக்கில் பணம் மோசடி செய்துள்ள இந்த டிப் டாப் போலி போலீஸ் ஆசாமி மீது தமிழக காவல் துறை டிஜிபி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப் பட்ட அனைவரின் கோரிக்கையாகும்.