நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தை நள்ளிரவில் ஜேசிபி மற்றும் கம்பரசர் இயந்திரங்கள் மூலம் உடைத்து ராட்சத பைப்புகளை கொண்டு செல்ல 50 லட்சம் லஞ்சம்!?
சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் உதவி பொறியாளர் இருவர் மீது
நடவடிக்கை எடுப்பாரா சேலம் மாவட்டம் ஆட்சியர்!

நீர்நிலைகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு பைப்புகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிகள் பெரும்பாலும் ஒப்பந்த முறையில் வழங்கப்படும். இதற்கு, விவசாயி சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள், விவசாயிகளுக்கு குழாய் அமைப்பதற்கு மானியங்கள் வழங்குகின்றன.
நீர் வள மேலாண்மைச் சட்டத்தின் கீழ், நீர்நிலைகளை முறையாகப் பயன்படுத்தவும், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கவும் அரசு அனுமதி அளித்து வருகிறது.
அதே போல் தற்போது
சேலம் மாவட்டத்தில்
மேட்டூர் அணை பவானி கூடுதுறை செல்லும் வழியில்
எடப்பாடி மேட்டூர் இடையே
மலைகளுக்கு நடுவில் பூலாம்பட்டி நீர் தேக்கம் அமைந்துள்ளது.. இந்த பூலாம்பட்டி நீர்த்தேக்கம் எடப்பாடியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை பிரிக்கும் ஆறு பூலாம்பட்டி மற்றும் நெரிஞ்சிபேட்டை வழியாக செல்கிறது. பூலாம்பட்டி நீர் தேக்கத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ராட்சதப் பைப்புகள் ( இரண்டரை அடி சுமார் 30 அங்குலம் )மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல பொதுப்பணி துறை மூலம் ஒப்பந்த விடப்பட்டு சுமார் பல கோடி ரூபாய் வரை கொடுத்து ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் .
அப்படி ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் பூலாம்பட்டி நீர்த்தேக்கத்திலிருந்து
எடப்பாடி கொங்கனாபுரம் சங்ககிரி நாமக்கல் மாவட்டம் கோழிகால் நத்தம் வரை 40 கிலோ மீட்டர் வரை பைப் வழியாக தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு ராட்சத பைப்புகளை அமைக்க
ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் ஐந்து கிலோ மீட்டருக்கு அதாவது சுமார் 100 ஏக்கர் வரை ஒரு நபருக்கு சப் காண்ட்ராக்ட் வழங்கி உள்ளதாகவும் அதேபோல் ஐந்துக்கு மேற்பட்ட தனி நபர்களுக்கு சப் காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும்
அப்படி சப் காண்ட்ராக்ட் எடுத்த தனி நபர்கள்
விவசாய நிலங்களுக்கு
ஒரு யூனிட் தண்ணீர் ஆதாவது 3 ஏக்கர் நிலத்திற்கு விவசாயம் செய்ய தண்ணீர் பயன்படுத்திக் கொள்ள 20 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளிடம் வசூல் செய்யப்படுகிறது.
ஆனால் இந்த பைப் லைன்களை தனியார் பட்டா விவசாய நிலங்களுக்குள் கொண்டு செல்லக்கூடாது .
அப்படி பட்டா விவசாய நிலங்கள் வழியாக பைப்புகள் அமைக்க அந்தந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப பணம் கொடுக்க வேண்டும்.
ஆனால்
சேலம் மாவட்டம் சங்ககிரி ஈரோடு பிரிவு சாலை RS திருச்செங்கோடு செல்லும் சங்ககிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தின் கீழே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பைப்பு கொண்டு செல்ல நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் நெடுஞ்சாலைத்துறை அனுமதி இல்லாமல்


நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாலத்தை இரவோடு இரவாக

கம்பரசர் இயந்திரம் மற்றும் ஜேசிபி மூலம் உடைத்து சேதப்படுத்தி சட்ட விரோதமாக உடைத்து பைப்புகளை கொண்டு செல்ல
சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர்(கீர்த்தி, சுதா)ஆகியோருக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் சுமார் 50 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இந்த சட்ட விரோத செயலை செய்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது சம்பந்தமாக சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனரிடம் கேட்டபோது பாலம் வழியாக பைப் கொண்டு செல்ல அனுமதி கேட்டுள்ளதாகவும் அதற்கு ஏழு லட்சம் ரூபாய் நெடுஞ்சாலை துறைக்கு கட்ட சொல்லி இருப்பதாகவும் கூறினார் ஆனால் இது அனைத்துமே சட்ட விரோதமாக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாலத்தை உடைத்து பைப்புகளை கொண்டு செல்ல முயற்சித்தபோது பாலத்தின் அருகே உள்ள விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை செய்ததாகவும் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்தப் பாலம் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து பாலம் உறுதித் தன்மை இல்லாமல் இருப்பதால் அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் என்றும் குறிப்பாக இந்த நெடுஞ்சாலை வழியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதாகவும் தற்போது சாலை பிளவுபட்டு உறுதித் தன்மை இல்லாததால் பெரும் விபத்து நடக்கலாம் என கனரக வாகன ஓட்டுநர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி அல்லது சட்டவிரோதமாக பாலத்தை சேதப்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நெடுஞ்சாலைக்கு சொந்தமான பாலத்தை, குறிப்பாக அனுமதியின்றி கம்ப்ரசர் இயந்திரம் போன்ற கருவிகளைக் கொண்டு சேதப்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும்.
நள்ளிரவில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பாலத்தை கம்ப்ரசர் இயந்திரம் கொண்டு சேதப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் கடுமையான குற்றமாகும். இது அரசு சொத்தை சேதப்படுத்துவதோடு, பயணிகளின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும், மேலும் இவர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும். இது போன்ற செயல்களில் ஈடுபடாதவாறு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்!அவசியம்.நெடுஞ்சாலைக்கு சொந்தமான பாலத்தை, குறிப்பாக அனுமதியின்றி கம்ப்ரசர் இயந்திரம் போன்ற கருவிகளைக் கொண்டு சேதப்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும்.நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி அல்லது சட்டவிரோதமாக பாலத்தை சேதப்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ராட்சத பைப்களைப் பதிக்க, நெடுஞ்சாலைப் பாலத்தை உடைத்ததற்காக, சட்டவிரோதமாக ஜேசிபி மற்றும் கம்ப்ரசர் இயந்திரங்களைப் பயன்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒரு சம்பவம் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ராட்சத பைப் பதிக்கும் ஒப்பந்தம் எடுத்தவர்கள் கூறும்போது நெடுஞ்சாலைத் துறையில் அனுமதி வாங்கி இருப்பதால் வெடி வைத்து கூட பாலத்தை உடைத்து பைப்பை கொண்டு செல்வோம் என மிரட்டும் தேனியில் கூறுகின்றனர்.
ஆகவே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாலத்தை சட்டவிரோதமாக ஜேசிபி கம்பரசர் இயந்திரங்களை வைத்து உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் .அது மட்டும் இல்லாமல் பைப்புகள் கொண்டு செல்ல பாலத்தை உடைக்க சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் உதவி பொறியாளர் ஆகிய இருவர் 50 லட்சம் வரை லஞ்சம் வாங்கி இருக்கலாம் என சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் விசாரணை செய்து லஞ்சம் வாங்கியது தெரியவரும் நிலையில் உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர் ஆகிய இருவர் மீதும்

நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் மற்றும்

சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதுமட்டுமில்லாமல் தற்போது சேதமடைந்து உறுதித் தன்மையில்லாமல் இருக்கும் பாலத்தை
விபத்து நடப்பதற்கு முன்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் சேதமடைந்துள்ள பாலத்தை ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் சேலம் மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை..