பட்டப்பகலில் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் காரில் கடத்தல் ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள்!
நிலக்கோட்டை அருகே பட்டப்பகலில் காரில் ரேஷன் அரிசி காரில் கடத்தல் !
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவிராயபுரம் கிராமத்தில் அரசு நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது.
அரசு நியாய விலை கடைக்கு வரும் பொருட்கள் அனைத்தையும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவுட்டுள்ளது கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நியாய விலை கடையில் சரியாக அரிசி சர்க்கரை பருப்பு மற்றும் எரிபொருள் சரியாக வழங்கப்படுவதில்லை . நியாய விலை கடைகளில் சென்று பொது மக்கள் கேட்டால் சரியாக எந்த ஒரு பொருளும் வருவதில்லை பொது மக்களுக்கு வாங்காத குடும்ப அட்டைகளில் பொருட்கள் வழங்கியுள்ளதாகவும் குறுஞ்செய்திகளும் வந்துள்ளது.
தற்போது சீரகம்பட்டியின் நியாய விலை கடையில் பணிபுரியும் அலெக்ஸ் ரேஷன் கடைகளில் உள்ள அரிசி மூடைகளை கடத்திச் செல்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய வேஷம் அரிசியை சரியாக வழங்குவதில்லை என்றும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு தடுப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது ரேஷன் அரிசி காரில் கடத்தும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவது உறுதியானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை!