பணி மாறுதல் பெற்று வந்த உதவி மின் பொறியாளரை இரண்டு மணி நேரம் காக்க வைத்து இழிவு படுத்தி அனுப்பிய காடம்பாறை மின்சார வாரிய (SE ). மீது நடவடிக்கை எடுக்க மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கோரிக்கை!
பணி மாறுதல் பெற்று வந்த உதவி மின் பொறியாளரை இரண்டு மணி நேரம் காக்க வைத்து இழிவு படுத்திய காடம்பாறை மின்சார வாரிய (SE ). நடவடிக்கை எடுப்பாரா மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!? திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதவி மின் பொறியாளர் கார்த்திக் அவர்கள் கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை காடம்பாறை மின் நிலைய பவர் ஹவுஸ் க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருப்பத்தூர் EE அவர்களிடம் relieve அனுமதி பெற்றுக்கொண்டு 2/09/2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை காடம்பாறை மின் நிலைய SE அலுவலகத்திற்கு மாலை 3.30 மணிக்கு சென்றுள்ளார். 5.30 மணி வரை காத்திருந்தும் SE அவர்கள் AE கார்த்திக்கை பார்க்க மறுத்து விட்டதாகவும் அது மட்டுமில்லாமல் அவரைப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்று ஒரு கவரை கொடுத்து அந்தக் கவரை கோயமுத்தூரில் தான் பிரித்துப் பார்க்க வேண்டும் சொல்லி அனுப்புங்கள் என தன்னுடைய உதவியாளரிடம் கூறியதாகவும்
உதவியாளரும் SE என்ன சொன்னாரோ அதை அப்படியே கார்த்தி யிடம் சொல்லி இந்த கவரை கோயம்புத்தூரில் போய் நீiங்கள் பிரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது உங்களை SE பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார் என்று கூறிய அனுப்பி உளளார்னா.இதனால் கார்த்தி மிகவும் மன உளைச்சல் அடைந்து மூன்று நாட்களாக மிகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணி ஒரு உதவி மின் பொறியாளரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வாணியம்பாடி மின் நிலைய ஊழியர் முருகேசன் இடம் தகவலை தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக என்ன நடந்தது என்று கேட்பதற்கு காடம்பாறை SE அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை! பணி மாறுதல் பெற்று வரும் ஒரு அதிகாரியை மற்றொரு உயரதிகாரி இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டது மின் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மின்சாரத்துறை அமைச்சர் ஒரு அதிகாரி மீது மற்றொரு அதிகாரி இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உதவி மின் பொறியாளர் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.