காவல் செய்திகள்

பப்பாளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில்  இரண்டு தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!  உண்மையை மறைத்து திசை திருப்ப முயற்சிக்கும் உடுமலை ஜோசப் ஆக்ரோ தொழிற்சாலை நிர்வாகம்!
பாதுகாப்பு தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுப்பார்களா!?

உடுமலை சடைய கவுண்டம்பாளையம் புதூர்

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளன, ஆனால் தொழிற்சாலைகள் சட்டம் 1948 போன்ற சட்டங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக உள்ளன.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் 1.தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்ய வேண்டும்.
2.அபாயகரமான செயல்முறைகளை உள்ளடக்கிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விரிவான கொள்கையை வகுக்க வேண்டும்.
3..ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்வதைத் தடை செய்ய வேண்டும்.
4.அபாயகரமான பொருட்களை கையாளுதல், சேமித்தல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் பாதுகாப்பை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
5.அனைத்து தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அறிவுறுத்தல் மற்றும் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
ஆனால் இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும், சில தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
இதற்கு உதாரணமாக
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம்
சடைய (கவுண்டன்புதூர் )
அந்தியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பப்பாளி பழத்தை கூழ் உற்பத்தி செய்யும் ஜோசப்ஸ் ஆக்ரோ என்கிற தனியார் தொழிற்சாலை இங்கு வருகிறது.
இந்த தொழிறதொழிலாளர்கள்மாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
உ .பி மாநிலத்தைச் சேர்ந்த
தொழிலாளர்கள் ரோகித் திகில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அருண் குமார்கோ ஆகிய இருவரும் 01/04/24 அன்று
மின்மோட்டார் பொருத்திய பப்பாளி கழிவுகள் தொட்டியில்  சுத்திகரிக்கும் பணியில் ஒரு தொழிலாளி ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியுள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்கு அருகில் இருந்த மற்றொரு தொழிலாளி முயற்சித்தபோது தொட்டிக்குள் அவரும் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
.தொழிற்சாலை நிர்வாகம் அவர்கள் இரண்டு பேரையும்

உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் அவர்கள் இரண்டு பேர் உடல்களையும்

மருத்துவ உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
பப்பாளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து

உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உடுமலை வட்டாட்சியர் ஆகியோர் சம்பவம் நடந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு பப்பாளி கழிவு சுத்திகரிக்கப்படும் தொட்டியில் பொறுத்திருக்கும் மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டு விரல் வந்தார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தமாக சிஐடியு சங்க நிர்வாகிகள் கூறும்போது தொழிற்சாலைகளில்
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தான் இப்படிப்பட்ட உயிரிழப்பு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய சம்பந்தப்பட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் முறையாக தொழிற்சாலையை ஆய்வு செய்யாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு இருப்பதின் காரணமாக இப்படிப்பட்ட மிக மோசமான உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக இருக்கிறது .
எனவே தமிழக அரசும் மத்திய அரசும் தொழிலாளர் நலத்துறையும் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சாலைகளில்
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தொடர்ந்து தொழிற்சாலையில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்ட பாதுகாப்புகள் உள்ளிட்ட அணைத்தையும் ஆய்வு செய்து தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . அது மட்டும் இல்லாமல் தொழிற்சாலைகளில் சட்ட விதி மீறல் இருந்தால் தொழிற்சாலை நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதேபோல் தொழிற்சாலையில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்
தொழிலாளர்களுக்கு உடனடியாக இ எஸ் ஐ -பி எப் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் .
தமிழக அரசாங்கம் தொழிலாளர்களின் உடல்களை சொந்த மாநிலத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாட்டை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button