பராமரிக்கப் படாமல் இருந்த மின் பெட்டியில் மின்சாரம் தாக்கி 10 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோக சம்பவம்!

பாலமேடு மதுரை மாவட்டம் பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ராஜம்மாள் தம்பதியர் இவர்களுக்கு பாக்கியராஜ் வயது 21 மஞ்சமலை வயது 15ஆகிய இரு மகன்கள் உள்ளனர் இதில் மஞ்சமலை என்பவர் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் 15/20/2024 நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் முன்பு பராமரிக்கப்படாத நிலையில் இருந்த கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் பெட்டியில் உள்ள மின் கம்பியில் கை வைத்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பத்தாம் வகுப்பு மாணவன் மஞ்ச மலையின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் மின்கம்பங்கள் பல இடங்களில் பராமரிக்கப் படாத நிலையில் இருப்பதால் மின் கம்பத்தை தொட்டாலே மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி இதுபோல் உயிரிழப்புகள் நடக்கும் முன்பு
மின் வாரியத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன!