பல்லாவரம் எம்எல்ஏ மகனை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின்இயக்குனர் அறிவுறுத்தல்!
பல்லாவரம் எம்எல்ஏ மகனை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் அறிவுறுத்தல்!
சென்னை.23
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வன்கொடுமை செய்ததாக பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பெண் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகார் கொடுத்ததன் பேரில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் அவர்கள்( 22/01/2024 ) திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் அவர்களிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பற்றி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது எம்எல்ஏ மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு இன்னும் FIR இல் பல பிரிவுகளை மாற்றி வழக்கு பதிவு செய்ய கேட்டுக்கொண்டார்.
அது மட்டுமில்லாமல் எம்எல்ஏ மகன் முன் ஜாமின் வழங்க முயற்சித்து வருவதாகவும் அதற்கு அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் முன் ஜாமின் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் .
அது மட்டுமல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பல்லாவரம் எம்எல்ஏ மகன் மகனை உடனே கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஆவணங்களின் நகல்களை தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அலுவலகத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு சம்பந்தமாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் விசாரணை மேற்கொண்ட போது துணை ஆணையர், உதவி ஆணையர் ,காவல் ஆய்வாளர் ,காவல் உதவி ஆய்வாளர் அனைவரும் உடன் இருந்தனர்!