பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களிடம் மின்விசிறி வாங்கி கொடுக்குமாறு வற்புறுத்தும் மருத்துவமனை ஊழியர்கள் !?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத் துறை நிர்வாகம்!?
பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களிடம் மின்விசிறி கேட்கும்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத் துறை நிர்வாகம்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் 7மருத்துவர்கள் 12 செவிலியர்கள் ஒரு மருந்தாளர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதில் முக்கியமாக கால் முறிவு நிபுணர் மருத்துவர் இல்லை. அது மட்டும் இல்லாமல் மூன்று மருந்தாளர்கள் இருக்க வேண்டும் ஆனால் தற்போது ஒரு மருந்தாளர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளார் .
அதேபோல் 20 செவிலியர்கள் இருக்க வேண்டிய மருத்துவமனையில் 12 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.
தற்போது மழைக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து பல இடங்களில் மழைநீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி கொசுக்கள் கடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் வரும் போதுமான மருந்து இல்லை என்றும் நோயாளிகளை சரிவர பரிசோதனை செய்யவில்லை வெளியே அனுப்புவதில் மட்டுமே குறியாக இருக்கின்றன மருத்துவமனை ஊழியர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே போல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் இல்லை என்று பொதுமக்களிடம் புகார் வந்த வண்ணம் உள்ளது . இந்தப் புகாருக்கு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை நிர்வாகம்
எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களுக்கு உயிர் காக்கும் போதிய மருந்து இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது யார்? மருந்துகளுக்காக அரசாங்க திட்டத்திலிருந்து வரும் பணம் என்னவாகின்றது என்று தெரியவில்லை?
இந்த பிரச்சனையை உடனே போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைவிட ஒரு அதிர்ச்சி தகவலும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று வரும் நோயாளிகள் தெரிவித்தனர். அது என்னவென்றால் வாடிப்பட்டி சுற்றியுள்ள பல கிராமத்திலிருந்து வரும் ஏழை எளிய சாமானிய விவசாய தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பிரசவத்திற்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்தது மாதத்திற்கு 10 முதல் 20 பெண்களாவது பிரசவத்திற்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. அப்படி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களிடம் மருத்துவமனையில் மின்விசிறி இல்லை என்றும் மின்விசிறி வாங்கி கொடுங்கள் இல்லையென்றால் மின்விசிறி கானா பணத்தை கொடுத்தால் நாங்கள் வாங்கிக் கொள்வோம் என்று கேட்பதாகவும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
அப்படி பணம் கொடுத்தவர்களிடம் ஏன் மருத்துவமனையில் கேட்டால் நீங்கள் ஏன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கேட்கும் பணம் மற்றும் மின்விசிறி வாங்கி கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் மாலை நேரங்களில் பெரும்பாலும் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை என்றும் செவிலீர்களே வரும் நோயாளிகளுக்கு ஊசி மற்றும் மருந்துகளை கொடுத்து அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஆகவே
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் சேர்ந்து இப்படி ஏழை எளிய சாமானிய பெண்களிடம் நூதன மோசடியில் பணம் பறித்து வருவதால் இவர்கள் மீது சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர் விசாரணை செய்து பணம் பறிக்கும் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக பலமுறை புகார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும் ஆனால் புகார் சம்பந்தமாக சுகாதாரத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் அனைவரும் தனியாக மருத்துவ கிளினிக் வைத்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவருக்கும் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அரசு மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர்கள் அவர்கள் வைத்திருக்கும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடம்பு முழுவதும் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகொடுத்து ஊசி போடுவதாகவும்
ஆனால் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அவர்கள் உடம்பில் என்ன நோய் இருக்கின்றது என்று தொட்டு பரிசோதனை செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அதே மருத்துவர்கள் தனியாக நடத்தும் கிளினிக் வரும் நோயாளிகளை பரிசோதித்து ஊசி போட்டு மருந்து கொடுப்பதாகவும் அதற்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை வாங்குவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்..
தற்போது மழைக்காலம் என்பதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி கொசுக்கள் கடிப்பதால் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய் வருவதால் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் போதுமான மருந்து இல்லை என்றும் நோயாளிகளை சரிவர பரிசோதனை செய்யவில்லை என்றும் இதனால் சாமானிய ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் நிலைமைக்கு தள்ளப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு எப்போது விடிவு காலம் ஏற்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.