பிரபல நகைக்கடையில் 30 லட்சம் மதிப்புள்ள தங்க காசுகள் வாங்கி பணம் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார்!?
சென்னை டி நகர் ஜி என் செட்டி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 17/09/2024 அன்று பெயர் எஸ். சுகுமாரன் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்றும் ஒரு திரைப்பட நடிகர் அனுப்பிவிட்டதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பரிசு பொருளாக கொடுக்க தங்க காசுகள் வேண்டும் என கேட்டு (280 கிராம் எடையுள்ள சுமார் 30 தங்க காசுகளை ) அதன் மதிப்பு சுமார் ( 30 லட்சம் மதிப்பு )வாங்கியுள்ளார்.
அப்போது பணத்திற்கு பதிலாக வங்கி காசோலையை கொடுத்துள்ளார். கடை உரிமையாளர் காசோலையை வாங்க மறுத்துள்ளார். உடனே திரைப்பட தயாரிப்பாளர் அந்த நடிகருக்கு போன் செய்து கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். அந்த நடிகரும் கடை உரிமையாளரிடம் தெரிந்த தயாரிப்பாளர் தான் செக் பாஸாகிவிடும் ஆகவே செக்கை வாங்கிக் கொண்டு தங்க காசுகளை கொடுக்குமாறு கூறியுள்ளார். நடிகர் கூறியதை நம்பி கடை உரிமையாளரும் செக்கை பெற்றுக் கொண்டு தங்க காசுகளை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் வங்கியில் காசோலை பணம் இல்லாமல் திருப்பி வந்துள்ளது. அதன் பின்னர் அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து பணம் கேட்டால் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். உடனே கடை உரிமையாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மீது பணம் மோசடி புகார் கொடுத்து புகாரின் மீது தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து தயாரிப்பாளர் கொடுத்த முகவரியில் ( நம்பர்95/6 சுந்தரமூர்த்தி கிராமணி தெரு விருகம்பாக்கம் சென்னை ( காவல்துறையினர் சென்று பார்த்தபோது இல்லை என்றும் அவர் தற்போது வேறு முகவரியில் இருப்பதாகவும் தயாரிப்பாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க தயாரிப்பாளரின் வழக்கறிஞர் காவல்துறையினரிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. எது எப்படியோ இதுபோன்று ஒரு சில திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்யும் தவறால் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது உள்ள நம்பிக்கையே இல்லாமல் போய்விடும் என மூத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.