பாம்புகளின் கூடாரமாக காட்சியளிக்கும் பெண்கள் கழிப்பறை! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
பாம்புகளின் கூடாரமாக காட்சியளிக்கும் பெண்கள் கழிப்பறை!
பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதங்களாக பார்க்க வேண்டாம் . மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வந்த கழிப்பறை தற்போது பாலடைந்து பாம்புகளின் கூடாரமாக காட்சியளிக்கும் அவல நிலையால்
கழிப்பறை இல்லாமல் சாலைகளின் ஓரங்களில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வரும் பெண்களின் அவல நிலை!
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் பயன்படுத்தி வந்த கழிப்பறை இடிந்து பாழடைந்து காணப்படுவதால் அந்தக் கட்டடத்திற்குள் விஷப்பாம்புகள் கூடாரமாக மாறி உள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் அந்த பாழடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக பெண்கள் கழிப்பறை கட்டிக் கொடுக்க கிராம பொதுமக்கள் சார்பாக பலமுறை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆகவே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இடிந்து கிடக்கும் இந்த பெண்கள் கழிப்பறை கட்டிடத்தை அகற்றி புதிதாக பெண்கள் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். இடம் டி .மீனாட்சிபுரம் அருப்புக்கோட்டை ஒன்றியம் ,விருதுநகர் மாவட்டம்,
எது எப்படியோ மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு பயன்பட பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அந்தத் திட்டங்கள் முழுவதுமே சில வருடங்களுக்கு பின்பு காணாமல் போய்விடுவது தான் ஏனென்றால் அந்தத் திட்டங்கள் முழுவதுமே ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் 40 சதவீதத்துக்கு மேல் கமிஷன் கொடுத்து அந்தப் பணியை செய்கிறார்கள் அதனால் அந்தப் பணி எப்படி இருக்கும் என்பது கடவுளுக்கே சாட்சி. அந்தப் பணிகளில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்து கொண்டிருப்பதை மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் இரண்டு பேரும் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனையாக உள்ளது.
டி மீனாட்சிபுரம் ஊராட்சி மன்றத்தில் புதிதாக பெண்களுக்கான கழிப்பறை கட்டிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை பல ஆண்டுகளாக இடிந்து முட் புதராக காணப்படும் பெண்கள் கழிப்பறையை முதலில் அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்தால் போதும் என்ற மனநிலையில் கிராம பொதுமக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்