பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை பிரித்து எடுப்பதில் கருத்து வேறுபாட்டால் ஒருவருக்கொருவர் புகார்!?நடவடிக்கை எடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!

லஞ்சப் பணத்தை பிரித்து எடுப்பதில் முரண்பாடு ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவருக்கொருவர் புகார்! நடவடிக்கை எடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!

பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து ஊழல் முறைகேடு நடப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருவதாகவும் ஆனால் அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்குவதற்கு பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாகவும் மாதம் குறைந்தது ஐந்து லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை லஞ்சம் கிடைக்கும் என்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறைக்கு உட்பட்ட 22 குவாரிகளில் சட்டவிரோதமாக தனிமை வளங்களை வெட்டி எடுத்து கடத்தி எடுத்துச் செல்வதற்கு மாதம் குறைந்தது 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் வரை லஞ்சமாக கிடைக்கும் என்றும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அந்தப் பணத்தை பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்,வட்டாட்சியர், சர்வேயர், துணை வட்டாட்சியர் ,கிராம நிர்வாக அலுவலர் பிரித்து எடுத்துக் எடுத்துக் கொள்வார்களாம் . சில தினங்களுக்கு முன்பு லஞ்சமாக பெறப்பட்ட பணத்தை பிரித்து எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் முரண்பாடு ஏற்பட்டதால் இவர்களுக்குள் மோதல் போக்கு இதில் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசி வந்ததாகவும் வட்டாட்சியர் பெரியகுளம் தென்கரை கிராம நிர்வாக அலுவலரே ஒருமையில் பேசுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஏழை நபர் தனது வீட்டின் அடிப்படை தேவைக்கு மண்,கிராவல், கற்கள் கொண்டு சென்றால் அதனை தடுத்து அபராதம் விதிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் தினமும் இரவு பகலாக கொள்ளை போகும் கனிம வளங்களை கன்னெதிரே கண்டாலும் நடவடிக்கை எடுப்பதில்லை .இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்தால் அரசியல்வாதிகள் மூலமோ அல்லது காவல் அதிகாரிகள் மூலமோ மிரட்டல் அச்சுறுத்தல் போன்ற நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர். பட்டா மாறுதலுக்கு வரும் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் லஞ்சம் கொடுக்காததால் அவர்களது விண்ணப்பங்களை தேனி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் நிறுத்தி வைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
ஆகவே தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாட்சியர், காதர் ஷரிப் அவர்கள் மீது பெரிய குளம் தென்கரை பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் கொடுத்துள்ளதாகவும்,

அவர்களுக்கு ஆதரவாக மாவட்ட சங்கத் தலைவர் கார்த்திக், செயலாளர், , ராமர், பொருளாளர், , மதுக்கண்ணன் ஆகியோர்களுடன் ஆலோசணைக் கூட்டம் தேனியில் நடத்தப்பட்டுள்ளது. பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் கொடுத்ததன் அடிப்படையில் உத்தமபாைளையம்,வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன் அவர்களிடம், சங்க தீர்மானக் கோரிக்கை மனுவை அளிக்க தேனி மாவட்ட ஆட்சியர் கூறியதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த விசாரணையில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகார் மனுவுக்காக, விசாரணைக்கு அமைக்கப்பட்டுள்ள ஐசிசி விசாரணை கமிஷன் அமைப்பின் மீது தாங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும்.மேலதிகாரிகளை அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் எப்படி நியாயமாக விசாரிக்க முடியும் என்றும். வருவாய்த்துறை சம்மந்தமான அனைத்து தகவல் தொடர்பு குழுவில் இருக்கும் அனைவரும் விலகிக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும், வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுப்பதென்றும், தொடர்ந்து பெரியகுளம் கோட்டாட்சியரிடம், மனுக்கொடுப்பது, மீண்டும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், மாநில தலைவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை மனு வழங்கப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உத்தமபாளையம் இரண்டு வருவாய் கோட்டாட்சியர் கீழ் இருக்கும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஊழல் முறைகேடு தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மறுக்கும் நிலையில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் தாமரைகுளம், ஜெயமங்கலம், வடவீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு அரசு அதிகாரிகளின் உதவியுடன் பட்டா மாறுதல் செய்யபட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக அப்போது பணியில் இருந்த இரண்டு வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் உட்பட 14 பேர் மீது குற்றபிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் முன்பு வட்டாட்சியர்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்புடைய பலரும் ஆஜராகி விசாரனை நடத்தபட்டு வந்தது, பலர் கைது செய்யபட்டு, சிறையில் அடைக்கபட்டனர். இந்நிலையில் சிபிசிஐடி விசாரனைக்கு ஆஜராகுமாறு அழைக்கபட்ட பெரியகுளம் பகுதி மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம், நில அளவையர் சக்திவேல் மற்றுக் சக்திவேலுக்கு உதவியாக இருந்த செல்வராஜ் ஆகியோரிடம் சிபிசிஐடி டி,எஸ்,பி சரவனன் விசாரனை நடத்தினார்.
அந்த விசாரணையின் முடிவில் அவர்கள் 3 பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யபட்டவர்கள் தேனி மாவட்ட நிதிமன்றத்தில் நிதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் தேனி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கபட்டது குறிப்பிடத்தக்கது