மாவட்டச் செய்திகள்

பேரூராட்சி பணியாளர்கள் பணி மாறுதலுக்கு பல லட்சம் லஞ்சம் !? மதுரை மண்டல உதவி இயக்குனர்சேதுராமன் மீது தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு! மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர் நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுப்பார்களா!?

பேரூராட்சி பணியாளர்கள் பணி மாறுதலுக்கு பல லட்சம் லஞ்சம் !?
அதிகார ஆதிக்க சக்திகளின் துணை கொண்டு செயல்படுவதாலும் சிண்டிகேட் அனைத்து பணி மாறுதல்களில் பணம் பறிப்பு வேலைகள் நடைபெற மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் அவர்களே துணை இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்!

தமிழ் நாட்டில் 528 நகர்ப்புற அமைப்பான பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக பேரூராட்சிகள் இயக்ககம் செயல்பட்டு வருகிறது.நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாகம் சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகரில், இயங்கி வருகிறது
செல்வராஜ் சென்னை பேரூராட்சி ஆணையராக இருக்கிறார்.


மதுரை மண்டல உதவி இயக்குனர் அலுவலக செயல்பாடுகளை எதிர்த்து பணியாளர்களின் துணையுடன் போராட்டத்திற்கு தூண்டப்படும் சூழ்நிலை மதுரை பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் அவர்கள் உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன்
மதுரை மாவட்ட ஆட்சியர்



கடந்த மாதம் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பாக மதுரை பறவை பேரூராட்சி சமுதாயக் கூட்டத்தில் மாநில தலைவர் பிச்சமுத்து தலைமையில் மாவட்ட தலைவர் பரமசிவம் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது


மதுரை மாவட்ட பேரூராட்சிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரி தண்டலர் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றியதை கணக்கிட்டும் விருப்ப பணி மாறுதல் கோரிய பணியாளர்களை கணக்கிட்டும் மதுரை மாவட்ட அளவில் கலந்தாய்வு செய்து பணி மாறுதல் உத்தரவு வழங்கிட கேட்டு மதுரை மண்டல உதவி இயக்குனர் அவர்களையும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும் மதுரை மாவட்டத்திலுள்ள வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் அவர்களையும் நிதித்துறை அமைச்சர் அவர்களையும் சென்னை சென்ட்ரல் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்களையும் பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களையும் சந்தித்து பணி மாறுதல் உத்தரவு வழங்கிட கேட்டு கோரிக்கை மனு கொடுக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.



மதுரை மண்டல உதவி இயக்குனர் அலுவலக தற்போதைய செயல்பாடுகள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எந்த விதத்திலும் தற்போது உறுதுணையில்லாமல் செயல்படுவதும் மதுரை மண்டல அலுவலகத்தில் தலைமை எழுத்தர் பணியிடம் கடந்த ஆறு மாத காலமாக காலியாக இருப்பதாகவும் பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய தினசரி பணிகள் மிகவும் மந்தமாகவும் காலமா தாமதமாகவும் செயல்படும் சூழ்நிலை உள்ளதாகவும் மண்டல அலுவலக பணியாளர்களுக்கும் பேரூராட்சி அனைத்து பணியாளருக்கும் இடையே ஒற்றுமை இன்றி மதுரை மண்டல உதவி இயக்குனர் அலுவலக செயல்பாடுகள் திருப்திரகமாக இல்லாததாலும் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக செய்து கொடுத்திட மதுரை மண்டல உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்ட அளவில் உள்ள இளநிலை உதவியாளர் முதல் கீழ்நிலை பணியாளர்கள் வரை பணி மாறுதல்கள் மற்றும் இதர கோரிக்கைகளை தினசரி செய்து கொடுத்து வந்த மதுரை மண்டல உதவி இயக்குனர் அலுவலகம் தற்போது எங்களால் எதுவும் செய்து தர முடியாது என்றும் பணி மாறுதல்கள் போன்ற எந்த செயல்களும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடத்திலும் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களிடத்திலும் முறையிட்ட பின்னர் அவர்கள் தரும் அறிவுரையின் அடிப்படையிலேயே எதுவும் செய்து தர முடியும் என்று மதுரை மண்டல உதவி இயக்குனர் அவர்கள் தெரிவிப்பதோடு அவர் ஆதிக்க சக்திகளின் துணை கொண்டு செயல்படுவதாலும் சிண்டிகேட் அனைத்து பணி மாறுதல்களில் பணம் பறிப்பு வேலைகள் நடைபெற மதுரை மண்டல உதவி இயக்குனர் அவர்களே துணை இருப்பதாகவும் மதுரை மண்டல உதவி இயக்குனர் அலுவலக செயல்பாடுகளை எதிர்த்து பணியாளர்களின் துணையுடன் போராட்டத்திற்கு தூண்டப்படும் சூழ்நிலை மதுரை பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் அவர்கள் உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

பேரூராட்சிகளில் பணியாற்றும் கணினி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், குடிநீர் மற்றும் தெரு விளக்கு பணியாளர்களது நீண்ட நாள் கோரிக்கை, தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களது கோரிக்கைகள் அடங்கிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மைய வழிகாட்டுதலோடு சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும்

மாண்புமிகு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களின் சந்தித்து வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கோ பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் சென்று கோரிக்கை கொடுக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பிச்சமுத்து மாவட்ட தலைவர் பரமசிவம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button