பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவு நீதிமன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டது. நீங்கள் எடுக்கும் முடிவை நீதிமன்றம் மாற்ற முடியும். அந்த கட்டுப்பாட்டோடு பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கிறோம் என்று தீர்ப்பு வழங்கலாம் !!!

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். இவர் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளார். 9.15 மணிக்கு பொதுக்குழு நடக்க உள்ளது. வெறும் 15 நிமிட இடைவெளியில் பொதுக்குழு நடக்க உள்ளது. இதனால் நாளை காலை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொத்தம் 4 விதமான தீர்ப்புகள் இதில் வழங்கப்படலாம். முதல் விஷயம்.. அதிமுக பொதுக்குழு நடக்கலாம். உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதால் அதை தடை செய்ய முடியாது. பொதுக்குழு நடக்கட்டும். உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம். இது எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்பாக அமையும். பெரும்பாலும் இந்த தீர்ப்புதான் வழங்கப்படும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இது போக மற்ற 3 தீர்ப்புகள் வந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செல்லும் வாய்ப்புகள் உள்ளன.அதன்படி பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்பட்டால் அது சிக்கலாகும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. அப்படி இருக்கும் போது பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும். எனவே இந்த பொதுக்குழு சட்டப்படி நடக்கவில்லை என்று கூறி, பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த தீர்ப்பு வந்தால் எடப்பாடி கனவு மீண்டும் கலையும்.
பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவு நீதிமன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டது. நீங்கள் எடுக்கும் முடிவை நீதிமன்றம் மாற்ற முடியும். அந்த கட்டுப்பாட்டோடு பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கிறோம் என்று தீர்ப்பு வழங்கலாம்.
My brother recommended I might like this blog.
He used to be entirely right. This publish actually made my day.
You cann’t believe simply how so much time I had spent
for this information! Thank you!