பொதுச் செயலாளர் பதவி யாருக்கும் கிடையாது! பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது! ஒற்றை தலைமை பற்றி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஓபிஎஸ்!

பொதுச்செயலாளர் பதவி அம்மாவிற்கு கொடுத்த பதவி அம்மாதான் நிரந்தரப் பொதுச்செயலாளர் . அம்மாவிற்கு மட்டும்தான் பொதுச் செயலாளர் பதவி யாருக்கும் தரக்கூடாது என்ற பேச்சு வார்த்தை முடிவு செய்யப்பட்டது.
முதலமைச்சர் பதவிக்கு இருக்கும் அதிகாரம் துணை முதல்வருக்கு இல்லை என்று தெரிந்தே நான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன் ஓபிஎஸ்.
அதுவும் அழுத்தத்தின் பெயரில் ஏற்றுக்கொண்டதாக ஓபிஎஸ்.
நன்றாக தான் இரட்டை தலைமை சென்று கொண்டிருந்தது.
இது கனவா நினைவா என்று தற்போது தெரியவில்லை ஓபிஎஸ்
அணிகள் இணைப்பின் போது பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு யாருக்கும் அளிக்கக்கூடாது என பேசப்பட்டது.
மாதவரம் மூர்த்தி தான் முதலில் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆரம்பித்தார்
தலைமைக் கழக நிர்வாகிகள் நாங்கள் இருக்கும்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசுவது தவறு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேவையில்லாமல் பொதுவெளியில் ஒற்றை தலைமைதான் என்ற கருத்தை சொன்னது தற்போது தேவையா என்ற நிலையில் தற்போது தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு உள்ளனர்.
அதிமுக கட்சியில் இருப்பது தொண்டர்களை காப்பாற்றுவதற்கு மட்டுமே நான் தற்போது வரை இருக்கிறேன் ஓபிஎஸ்.
இரண்டு முறை முதலமைச்சராக மனநிறைவோடு பணியாற்றி உள்ளேன்.
ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை அழைத்து அனைவரும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று பேசினார்கள் அப்போது நான் மறுத்தேன்.
ஏனென்றால் எந்தவித அதிகாரமும் நான் ஆசைப்பட்டது இல்லை என்று ஓபிஎஸ்
என்னை எந்த நேரத்திலும் அதிமுக கட்சியில் ஓரங்கட்ட நீக்கவோ முடியாது
பொதுச் செயலாளர் என்ற பதவியேபோட கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
அப்படி இருக்கும்போது பொதுச் செயலாளர் என்ற பதவியை பொதுக்குழுவில் யாராவது விரும்பினால் அந்த துரோகத்தை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தினால் அதிமுக கட்சி பிளவு படுத்த கூடாது . நானும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒற்றைத் தன்மை குறித்து பேசவில்லை ஓபிஎஸ். ஒற்றை தலைமை பற்றி பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலில் பேச்சுவார்த்தையின்போது கையெழுத்து நான் மட்டும் போடுவதால் தான் இருந்தது அதன் பின்பு இரண்டு நாள் கழித்து இரண்டு பேரும் கையெழுத்து போடுவதாக கூறி னார்கள் அதற்கும் நான் சம்மதித்தேன் ஓபிஎஸ்.
என்னால் எந்த ஒரு சலசலப்பு வந்துவிடக்கூடாது என்று நான் அதில் மிக ஜாக்கிரதையாக உள்ளதாக ஓபிஎஸ் செய்தியாளரிடம்.