போதை பொருள் விற்றவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அலங்காநல்லூர் காவல் உதவி ஆய்வாளர்! அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ள கோவில் பாப்பாகுடி, பொதும்பு பகுதிகளில்இரவு நேரங்களில் டவுசர் அணிந்துக் கொண்டு கொள்ளையர்கள் கும்பலாக வந்து வீடுகளை நோட்டமிட்டு வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபடுவதாக சில நாட்களுக்கு முன்பு அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
ஆனால் அலங்காநல்லூர் போலீசார் பொதுமக்களின் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் இரவு ரோந்து பணி செல்லாததால் பொறுமையிழந்த பொதுமக்கள் தாங்களே.காவல் பணியை செய்தால் என்ன போலீஸ் எதுக்கு என முடிவு செய்தனர்.எனினும் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் தொடர்ந்துகொண்டே இருப்பதை அப்பகுதி மக்கள் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
எனினும் போலீசாரை நம்பி எந்த பயனும் இல்லை என எண்ணிய பொதுமக்கள் தாங்களாகவே வீட்டிற்கு ஒருவர் வீதம் கும்பலாக உருட்டு கட்டைகளுடன் நள்ளிரவில் தங்களது வீடுகளை பாதுகாத்து ரோந்து சுற்றி வந்து தங்களை தாங்களே தற்காத்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே பூதகுடி லட்சுமிபுரத்தைச் அபிேஷக்குமார் 23. … என்பவர் இவர் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக அந்தப் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில்
அலங்காநல்லுார் காவல் உதவி ஆய்வாளர்., ரவிச்சந்திரன், தலைமை காவலர் சுரேந்திரன் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர் அப்போது அபிஷேக் குமார் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர். அதன் பின்பு அபிஷேக் குமாரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததாக
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திற்கு தகவல் கிடைத்தது. … அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது பணம் பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்யவில்லை என்பது உறுதியானது அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலங்காநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் சுரேந்திரன் இருவரையும் உடனடியாக
பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதுபோன்று லஞ்சம் பெற்றுக் கொண்டு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளும்…
காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி ஐ ஜி பொன்னி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்….