போலி ஆவணங்கள் தயாரித்து தயாரிப்பாளருக்கு தெரியாமல் திரைப்படத்தின் OTT டிஜிட்டல் உரிமம் விற்று மோசடியா!?திரைப்பட உதவி இயக்குனர் தனபால் கணேசன் மீது
ஆவடி காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் புகார்!

குன்றம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் , இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் எம் ஏ ஆனந்த் , எம் எஸ் பாஸ்கர் ஆகாஷ் பிரேம்குமார் கபாலி விஸ்வநாத், பிரியதர்ஷினி வெண்பா நமோ நாராயணா, அருணாச்சலம் கார்த்திக் சந்திரசேகர் ஆகியோர் நடித்த

“அக்கரன்” என்ற தமிழ் திரைப்படத்தை கடந்த வருடம் 2024 மே மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது .
அப்போது


திரைப்பட உதவி இயக்குனரான தனபால் கணேஷ் என்ற நபர் இந்தத் திரைப்படத்தை நான் வெளியிடுகிறேன் என்றும் 70 திரையரங்குகளில் திரையிட்டு தருகிறேன் என்றும் அதற்காக ரூபாய் 15 லட்சம் வரை செலவு செய்வதாகவும் திரைப்படம் வெளியானதும் அதில் வரும் வருமானத்தில் 15 லட்சம் அதனுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் கமிஷன் மொத்தம் 25 லட்சம் ரூபாய் முதலில் எடுத்துக் கொள்வேன் என்றும் பேசி திரைப்பட உதவி இயக்குனர் தனபால் கணேசன் தமிழ் சினிமாஸ் என்ற தன்னுடைய நிறுவனத்தின் பெயரில்



2024 ஜனவரி 24ஆம் தேதி ஒப்பந்தம் போட்டுள்ளார்.
குறிப்பாக அந்த ஒப்பந்தத்தில் திரைப்படத்தின் மற்ற உரிமங்களை விற்பனை செய்யும் போது தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் தயாரிப்பாளருக்கு தெரியாமல் விற்கக் கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வைத்துள்ளனர். அதன் பின்னர் மே மாதம் முதல் வாரத்தில் படத்தை வெளியிட அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். ஆனால் தனபால் கணேசன் சொன்னது போல் 70 திரையரங்குகளில் திரையிடாமல் 10 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் அந்த திரையரங்களில் மட்டும் படத்தை வெளியிட்டதாகவும் ஆனால்

அக்கரன் திரைப்படத்தின் FMS உரிமத்தை விற்று அதில் வந்த ஐந்து லட்சம் ரூபாயுடன் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தனபால் கணேசன் தன்னுடைய வங்கி கணக்கில் பெற்றுள்ளார் .
அதன் பின்னர் 2024 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி அக்கரன் திரைப்பட தயாரிப்பாளருக்கு தெரியாமல்


குன்றம் ப்ரொடக்சன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் வாங்கிய தனபால் கணேசன் போலி ரப்பர் ஸ்டாம்ப் கையெழுத்து பயன்படுத்தி அக்கரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை தமிழ் சினிமாஸ் பெயரில் வாங்கியது போல போலியாக ஆவணங்களை தயாரித்து அந்த ஆவணத்தை வைத்து தயாரிப்பாளருக்கு தெரியாமல்


2025 ஜூன் மாதம் 17ஆம் தேதி (ISSA INFOTAINMENT) என்ற நிறுவனத்தின் பெயரில் சிசுராஜ் என்பவருக்கு தெரியாமல் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று மோசடி செய்துள்ளார். சிசுராஜ் (TENT KOTTA) என்ற நிறுவனத்திற்கு விற்ற பின்னர் அக்கரன் திரைப்படத்தை (TENT KOTTA) நிறுவனம் OTT தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனால் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் போலி ஆவணங்களை தயாரித்து திரைப்படத்தை விற்று மோசடி செய்த தனபால் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கும் படி 17/11/25 அன்று




ஆவடி காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பாளரின் தந்தையுமான தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு மதுரை மாவட்ட தலைவர் அன்னராஜ் அவர்கள் புகார் கொடுத்துள்ளார்.
வரை பெற்றுக் கொண்ட ஆவடி குற்றப்பிரிவு காவல் துறையினர் (C.no.3965 /2025 17/11/25 ) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார்ணையில் தான் போலே ஆவணங்கள் பயன்படுத்தி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை விற்றது உண்மையா என தெரியவரும்.
எது எப்படியோ தமிழ் திரையுலகில் புதிதாக தமிழ் திரைப்படங்கள் எடுக்க வரும் புது தயாரிப்பாளர்களுக்கு திரைப்படங்களை எடுத்து முடித்த பின்பு திரைப்படங்களை எப்படி திரையரங்குகளில் வெளியிடுவது அந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓ டி டி போன்ற உரிமங்களை எப்படி விற்பது எனத் தெரியாமல் இருப்பதால் அதை
சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில இடைத்தரகர்கள் தயாரிப்பாளர்களை அணுகி எனக்கு சினிமாவில் எல்லோரும் தெரியும் என காட்டிக்கொண்டு புதிதாக திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதாக ஆசை வார்த்தை கூறும் நபர்களை நம்பி இதுபோன்று ஏமாந்து திரைப்படத்தை எடுப்பதற்கு செலவு செய்த கோடிக்கணக்கான பணத்தை இழந்து யாரிடம் சொல்வது என தெரியாமல் சுற்றி வருகிறார்கள். தமிழ் திரைப்படம் தயாரிக்கும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கில்டு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்கிறார்கள். ஆனால் அந்த தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கில்டு சங்க தலைவர் அந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே புதிதாக தமிழ் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெற்று அதன் பின்பு திரைப்படங்களை தயாரித்து அதன் பின்னர் திரைப்படத்தை வெளியிடும்போது திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டு அதன் பின்னர் அந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும். அதன் பின்னர் மற்ற உரிமைகளை விற்க வேண்டும் என்றால் அதற்கான நிறுவனங்களிடம் நேரடியாக சென்று உரிமங்களை விற்க வேண்டும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதுதான் அனைத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இனிமேலாவது தமிழ் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டு செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




