மதுரை ஆட்டோவில் கடத்தி கொடூர கொலை! கண்மாயில் வீசிச் சென்ற கொலையாளிகள்!அதிர்ச்சி சம்பவம்!
மக்கள் திருமணம் நடந்து மூன்றாவது நாள் ஆட்டோவில் கடத்தி கொலை செய்து உடலை கண்மாயில் வீசி சென்ற கொலையாளிகள்.!
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் கலுங்கு பட்டியில் . 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் சடலமாக கிடப்பதாக செக்கானூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட கருப்பையா கழுத்து கண் போன்ற இடங்களில் குத்தி கொலை செய்துள்ளனர். கைப்பற்றிய காவல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் விக்கிரமங்கலம் அருகே உள்ள நடுமுதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பத்தேவர் மகன் கருப்பையா.59.என்பது தெரியவந்தது.கருப்பையாவிற்கு வசந்தி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.மேலும் நடுமுதலைக்குளம் கிராமத்தில். டீகடை வைத்து நடத்தி வந்துள்ளார். தினமும் காலையில் வீட்டில் இருந்து சென்று டீ கடையை திறப்பது வழக்கம். அதேபோன்று இன்று அதிகாலை வீட்டில் இருந்து கடைக்கு சென்று கடையைத் திறந்து அடுப்பை பற்றவைத்து டீ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் இவரை பிடித்து இழத்து சென்று ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்று உள்னனர். இதன்பின்னர் கருப்பையாவை கழத்தை அறுத்தும் கண்களை வெளியே தொண்டி எடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு பன்னியான் கண்மாய் பகுதி அருகே உடலை வீசி விட்டு கொலையாளிகள் தப்பி சென்ற உள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். சொத்து மற்றும் கடன் தகராறில் கொலை செய்யப்பட்டார்? முன் விரோதம் காரணமா? என பல கோணங்களில் செக்கானூரணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .அதிகாலையில் நடந்த இக்கொலை சம்பவத்தால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளநிலையில் கொலை செய்யப்பட்ட கருப்பையாவின் மூன்றாவது பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து உள்ளது.என்பது குறிப்பிட தக்கதாகும்.
கொலையாளிகள் நான்கு பேர் கைது!
செக்கானூரணி காவல் ஆய்வாளர் திலகராணி தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தனி படை அமைத்து கொலை செய்த நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில்.கொலையான இடத்தில் கிடந்த சௌந்திர பாண்டியின் என்பவனது செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்த பின்பு
ஆரப்பாளைத்தை சேர்ந்த சௌந்திரபாண்டி.35. கல்புளிச்சான்பட்டி ரவிசந்திரன் 22.உச்சப்பட்டியை சேர்ந்த அரவிந்த் குமார் .25.அருண்குமார் 27.ஆகாஷ் ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது நடு முதலைக் குளத்தில் உள்ள கருப்பையாவிற்கு சொந்தமான வீட்டு மனை இடத்திற்கு கிரயம் பேசி சௌந்திர பாண்டி 2.50.லட்சம் ரூபாய் கருப்பை யாவிடம். அட்வான்ஸ் பணம் கொடுத்து உள்ளார். இதற்கு பின்பு அதே வீட்டடி இடத்தை வேறு ஒரு நபருக்கு கருப்பையா கிரயம் செய்து கொடுத்துள்ளார்.இதை அறிந்த சௌந்திரபாண்டி வீட்டு மணிக்கு கொடுத்த அட்வான்ஸ் பணம் 2.50த்தை திரும்ப கேட்ட. போது. பணத்தை தர மறுத்து வந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமடைந்த சௌந்திபாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருப்பையாவை ஆட்டோவில் கடத்தி கொலை செய்ததாக விசாரணையில் கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை 12.மணி நேரத்திள்குள்ளே கண்டுபிடித்து கைது செய்த தனிபடை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்தார்.