மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் கட்டாயமாக கண்காணிப்பு கேமராபொருத்த வேண்டும் . காவல் நிலையங்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்
கடந்த சில மாதங்களாக மதுரை புறநகர் பகுதிகளில் நடந்த கொலை ,கொள்ளை திருட்டு வழிப்பறி, கற்பழிப்பு போன்ற பல்வேறு தொடர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 45க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மதுரை மாவட்ட எல்லையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம்
கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து வழிப்பறி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகை செல்போன் இருசக்கர வாகனம் மற்றும் அனைத்து பொருள்களையும் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்தெந்த கண்காணிப்பு கேமராக்களில் குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டது அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருந்த உரிமையாளர்களை அனைவரையும்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களுக்கு நன்றியையும் பாராட்டு வந்தவர்களையும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறியவும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய வாகனங்களை கண்டறியவும், பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடையவும் என பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கொண்ட பெண்கள் ஆண்கள் அனைவரையும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் வரவழைத்து அவர்களை காவல் கண்காணிப்பாளர் கௌரவம் படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மேலும், பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்களது பகுதிகளில் சமூக அக்கறையோடு சிசிடிவி கேமராக்களை நிறுவ காவல்துறையினருக்கு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்
மதுரை: மதுரை காவல் சரகத்துக்குட்பட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை: மதுரை காவல் சரகத்துக்குட்பட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அவ்வப்போது காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தமிழக காவல் துறை டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் மதுரை சரகத்துக்கு உட்பட்ட மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளுடன் காவல் துறையினரின் மன அழுத்தம் போக்குவது குறித்தும், சட்டம் – ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்டத்துக்கு வருகை தந்த நிலையில், தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் மதுரையில் காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக டிஜிபி காவல் துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து அத்தகைய குற்றங்களை தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்கள் காவல் துறையினர் நட்புறவை பேணிக் காப்பதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” பள்ளி, கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.