மாதம் 30 லட்சம் ரூபாய் கல்லா கட்டும் புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர்! லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை பாயுமா!?

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்த நிலையில் தற்போது 143 கடைகள் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மட்டும் தினசரி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விதியின்படி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் இவ்விதி தொடர்பாக விளம்பர பலகை வைத்திடவேண்டும். மேலும் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட போலீசாருடன் இணைந்து மதுபான கடை மற்றும் பார்களில் ஆய்வு நடத்தவும் சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு), டாஸ்மாக் மாவட்ட மேலாளர், புதுக்கோட்டை, அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் காகிதத்தில் மட்டுமே இந்த விதிகள் இருக்கின்றனர் என்றும் இந்த விதிகளை எல்லாம் காட்டில் பறக்கவிட்டு வயது வரம்பு இல்லாமல் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்து வருகிறார்கள் .டாஸ்மார்க் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கி மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பலமுறை அமைச்சர் எச்சரிக்கை விட்டும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காத டாஸ்மார்க் கடை விற்பனையாளர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு பத்து ரூபாய் இருபது ரூபாய் என அதிகம் வாங்கி மது பாட்டில் விற்பனை செய்து வருவது தான் நிதர்சனமான உண்மை.அதேபோல் அரசு டாஸ்மாக் கடை மது பானக்கூடங்களிலும் வயது வரம்பு பார்க்காமல் அனைவரையும் மது அருந்த விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிர்ணயம் செய்திருப்பதை. விட கூடுதல் விலைக்கு விற்பது, சில மது வகைகளுக்கு முன்னுரிமை அளித்து விற்பது, விற்பனையை குறைத்து காட்டுவது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன.அதிக விலைக்கு விற்கும் பணத்தை சூப்பர்வைசர் என அழைக்கப்படும் ரவி மற்றும் முருகேசன் ஆகிய இரண்டு பேர் வசூல் வேட்டை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல மதுபானக்கூடங்கள் அனுமதி இல்லாமல் இயங்குவதாகவும் அது மட்டும் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்பது விதி.ஆனால் பார் உரிமையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும் இணைந்து,அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு டாஸ்மாக் பார்களில் விடிய விடிய விற்பனை செய்யப்படுகிறது என்றும் இதனை, அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் கடைகளில் பீர், பிராந்தி, ரம், விஸ்கி ஆகிய மதுபாட்டிகள் கள்ளத்தனமாக மதுபானக்கூடங்களில் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும்சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுபானக்கூடங்களில் காலை 7:00 மணி முதல் விற்பனை செய்யும் மது பாட்டில்கள் டாஸ்மார்க் சூப்பர்வைஸர்கள் மூலம் வழங்கப்படுகிறது என்றும் அப்படி வழங்கப்படும் மது பாட்டில் 250 ரூபாய்க்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மது பானக்கூடங்களிலும் விற்கப்படுவதாகவும் அப்படி அதிக விலைக்கு விற்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் வசுந்தரா தேவி கீழே வேலைப் பார்க்கும் சிப்பந்திகளாக இருக்கும் இருவர் வசூல் செய்து வருவதாகவும் அப்படி வசூல் செய்யும் பணம் நாள் ஒன்றுக்கு சுமார் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் மாதம் 30 லட்சம் என்றும் அந்த பணத்தை புதுக்கோட்டை மாவட்ட மேலாளர் வசுந்தரா தேவி எங்கு எப்போது கொண்டுவந்து கொடுக்கச் சொல்கிறாரோ அங்கு சரியான நேரத்தில் வசூல் செய்யும் பணத்தை ஒப்படைத்து வருவதாகவும் மாதம் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை புதுக்கோட்டை மாவட்ட மேலாளர் வசுந்தரா தேவிக்கு வசூல் செய்து கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுக்கடையில் வெளி நபர்களை வைத்து மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதில் மட்டும் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்யப்படுவதாகவும் காரணம் கேட்டால் மின்சாரம், கட்டிட வாடகை கூலிங் சார்ஜ் என கூறுவதாகவும் டாஸ்மாக் கடையில் கலப்பட மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக குடிமகன்கள் புலம்புகின்றனர். விலை குறைவாக விற்கும் மது பாட்டில்களில் மூடியை திறந்து, அதில் உள்ள சரக்கை பாதியாக எடுத்துவிட்டு, ரசாயனம் கலந்து விற்பனை செய்வதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.இது பற்றி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம், கலால் பிரிவு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, கடைகளில் சோதனை நடத்துவது போல் வந்து, அவர்களுக்கு தேவையான பாட்டில்களை அள்ளி செல்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே.டாஸ்மாக் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் உட்பட அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ கடந்த அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மார்க் பார்களில் புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இருந்த மதி செல்வம். தனது சிப்பந்திகள் மூலம் பணம் வசூல் செய்து வந்த புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 8,34,500 பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்களில் மற்றும் டாஸ்மாக் அமைந்துள்ள பேருந்து நிலையம் போன்ற பல இடங்களில் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் காலை ஏழு மணி முதல் மது பாட்டில் விற்பனை செய்வதை ஆதாரங்களுடன் வரும் ரிப்போர்ட்டர் விஷன் புலனாய்வு இதழில் வெளிவர இருக்கிறது.