போலி ஆவணங்களை வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை சட்ட விரோதமாக அபகரித்து வரும் கும்பல்!நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை!

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள உதய நிதி ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது அந்த இடத்தை போலி ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக அபகரிக்கும் முயற்சியில் ஒரு சில கும்பல் ஈடுபட்டு வருவதாகவும் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீண்டும் அந்த இடத்தில் மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டி குடியிருக்க நடவடிக்கை எடுக்குமாறு 25-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம் கிராமம் கொத்தனார் காலனியில் மாற்றுத் திறனாளிகளுக்காக 21-12-22 ல் ஒதுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி 39 பேருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடத்தி உதயநிதி ஸ்டாலின் இலவச மனை பட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய 14 இடத்தை அளந்து ஒப்படைக்கப்பட்டது. அதிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்
மீதமுள்ள 25 நபர்களுக்கு இடத்தை கலந்து கொடுத்து ஒப்படைக்கவில்லை என்றும் தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா மட்டுமே கைவசம் உள்ளது என்றும் ஆகையால் 25 பேருக்கு இடத்தை அளந்து கொடுக்குமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு
மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர் . தற்போது அந்த இடத்தில் போலி ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக அந்த இடத்தை அபகரிக்கும் முயற்சியில் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகவும் மூல காரணமாக இருப்பது. மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் சொந்தக்காரர் அப்துல் வாகிது என்ற பெயரில் இருந்த இலவச வீட்டு மனையை

போலி ஆவணங்கள் மூலம் அப்துல் வாகிதுவை ஏமாற்றி அந்த இடத்தில் 30 லட்சத்திற்கு வீடு கட்டி உள்ளார் என மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா வைத்திருக்கும் 25 நபர்களுக்கு இடத்தை அளந்து ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.