மாவட்டச் செய்திகள்

மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ 3000 லஞ்சம் கேட்ட மதுரை விக்ரமங்கலம் இளநிலை பொறியாளர்!? கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை.

மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ 3000 லஞ்சம் வாங்கிய போது கைது!


மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் துணை மின் நிலையம் இளநிலை பொறியாளர் குணசேகரன் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.


விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் முத்துக் கணேஷ் தன்னுடைய தாய் பேச்சியம்மாள் பெயரில் வீட்டு மின் இணைப்பு மாற்றி தர கேட்டதற்கு 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின்பு துப்புரவு பணியாளரிடம் ரசாயனம் பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர் .அந்தப் பணத்தை30/03/2023 காலை 10 மணி அளவில் விக்கிரமங்கலம் துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் அலுவகத்தில் இருந்த போது குணசேகரன் இடம் நேரில் 2500 ரூபாய் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை DSP சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர் பாரதிப் பிரியா, குமரகுரு, அம்புரோஸ் ஜெயராஜ் மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இளநிலை பொறியாளர் குணசேகரனை கையும் களவுமாக கைது செய்துள்ளனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.. இதேபோல் மற்ற அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்ய வேண்டும் என்றும் அதில் முக்கியமாக வருவாய்த்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தால் மிகப்பெரிய ஊழல் முறைகேடு தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button