ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலின் சரியான நேரத்தை (ET) பயணிகள் அறிந்து கொள்ள முடியாமல் மெத்தன போக்கில் தஞ்சாவூர் ரயில் நிலைய ரயில்வே அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்குமா ரயில்வே துறை!?

ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலின் சரியான நேரத்தை பயனியில் பார்வைக்கு வைக்காமல் மெத்தன போக்கில் தஞ்சாவூர் ரயில் நிலைய ரயில்வே அதிகாரிகள்!
தஞ்சை வழியாக 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 20-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் பயணிகள் பயன்படும் வகையில் ரயில் வருகை டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற டிஜிட்டல் பலகை தமிழகத்தில் எந்த ரயில் நிலையத்திலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தான் இருக்கிறது என்பது வரவேற்கத்தக்கது.
இந்த டிஜிட்டல் பலகையின் முக்கியத்துவம் என்னவென்றால் ரயிலின் பெயர், ரயில் நிலையத்தில் நிற்கும் பிளாட்பார்ம் எண் ,வருகை நேரம், மற்றும் ரயில் நிலையத்திற்கு வரும் சரியான நேரம் இவை அனைத்தையும் அந்த டிஜிட்டல் பலகையில் ரயில் பயணிகள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இந்த டிஜிட்டல் பதிவேட்டில் ரயில் வரும் சரியான
நேரத்தை ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் நுழைவாயில் வைத்துள்ள டிஜிட்டல் பதிவேட்டை பராமரிக்கும் நபர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் வருகையை அறிவிக்கும் அதிகாரிகள் ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் சரியான நேரத்தை சொல்வதில்லை என்ற
குற்றச்சாட்டு எழுந்த்துள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்த போது இந்தியாவில் உள்ள எந்த ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலின் சரியான நேரத்தை ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முன் கூட்டியே தெரிவிப்பதில்லை என்றும் ரயில் வந்து பிளாட்ஃபாமில் நின்றவுடன் தான் ஒலிபெருக்கியில் ரயில்வே அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் ஐந்து 10 நிமிடம் மட்டுமே நின்று புறப்படும் .
நேரம் குறைவாக இருப்பதால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் ரயில் நிலையத்தில் வந்தடைந்து விட்டதா என்ற குழப்பத்தில் ரயில் நிலையத்துக்குள் செல்வதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலின் சரியான நேரத்தை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் நுழைவாயிலில் உள்ள டிஜிட்டல் பலகையில் தெரியும்படி பராமரிப்பவர்களிடம் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூகங்களின் கோரிக்கையாகும்.