வட மாநில இளைஞர் அடித்துக் கொலை! வாடிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க
தென்மண்டல ஐஜி இடம் புகார்!
வட மாநில இளைஞர் இறந்ததற்கு வாடிப்பட்டி காவல்துறை காரணமா!?
தென்மண்டல ஐஜி இடம் புகார்!
19 /9 /2023 அன்று நல்லிரவு 1.10 மணி அளவில் போடி நாயக்கம்பட்டி பேட்டை தெருவில் உள்ள வீட்டின் பாத்ரூமில் ஒரு மறுமண நபர் இருந்ததாகவும் அவர் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்ததாகவும் இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது யாரும் எடுக்கவில்லை என்று வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு நேராக சென்று காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் அவர்களிடம் தெரிவித்ததாகவும் பின்னர் இரவு 1:30 மணி அளவில் போடி நாயக்கம்பட்டி பேட்டை தெருவில் ரத்தக்காயங்களுடன் இருந்த இளைஞரை பார்த்து இவனை நான் தான் சிறிது நேரம் முன்பு அடித்து விரட்டி விட்டேன் தற்போது போதையில் இருப்பதால் காலையில் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று சென்று விட்டார் மறுபடியும் காலை நான்கு மணிக்கு எஸ்ஐ முருகேசன் அவருடன் மற்ற இரண்டு காவலரும் வந்து மயங்கி இருந்த நிலையில் அந்த வடமாநில நபரை வண்டியல் தூக்கி போட்டு எடுத்துச் சென்றனர். பின்னர் காலை 9 மணிக்கு காவல் வாகனத்தில் வந்த காவல்துறையினர் போடி நாயக்கம்பட்டி பேட்டை தெருவிலே உள்ள கண்ணன்/38 பெரியசாமி/26 சாந்தகுமார்/ 45 பழனிவேல்/36 ஐந்து பேரையும் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போட்டு விட்டுச் செல்லுங்கள் என்று காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஆனால் காவல் நிலையத்தில் அவர்களை வைத்துள்ளார்கள் வெளியே விடவில்லை. வடமாநில இளைஞர் எப்படி இறந்தார் அவர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. வாடிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசனுக்கு தான் தெரியும் என்றும் ஆகவே எந்தத் தவறும் செய்தாத அந்த நான்கு பேரையும் வெளியே விட வேண்டும் அது மட்டும் இல்லாமல் கொலை நடந்த சம்பவத்தை மறைக்க நினைக்கும் வாடிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறவர் இனத்தைச் சேர்ந்த போடிநாயக்கன்பட்டி பேட்டை தெருவில் வசிக்கும் ஜனகை மாரியம்மாள் வயது 22 (தந்தை பெயர் பெருமாள்)
தென்மண்டல ஐஜி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகாருக்கு முற்றிலும் மாறாக வாடிப்பட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளது.
வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி பேட்டை தெருவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் இரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போடி நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காளீஸ்வரி, உதவியாளர் கண்ணன் ஆகியோர் வாடிப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து,சப் இன்ஸ் பெக்டர் முருகேசன் மற்றும் போலீ சார் காலை 8மணிக்கு 108 மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக சேர்த்ததாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி 9.45 மணிக்கு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் போலீசார் விசாரணை செய்ததில்
அவர் வைத்திருந்த ஆதார் அட்டையைபார்த்தபோது அதில் கிருஷ்ணா பைன்கரா, தந்தை பெயர் சங்கர் பைன்கரா,வார்டு14 படாய் கேளா, சத்தீஸ்கர் என்று இருந்தது. இறந்த வாலிபர் எதற்காக இங்கு வந்தார். எங்கு வேலை பார்த்தார் என்ற விவபரம் எதுவும் தெரியவில்லை. அவர் உடலில் ரத்த காயம் எப்படி வந்தது.இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ வட மாநில இளைஞர் கொலை செய்யப்பட்டாரா !?இல்லை காவல்துறையினர் அடித்ததால் இறந்தாரா என்பதை தென்மண்டல ஐஜி அவர்கள் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே இந்த உயிரிழந்த சம்பவத்திற்கு உண்மையான காரணம் தெரியவரும் என்பதுதான் நிதர்சனம்.