மிகப்பெரிய ஆபத்தை உணராமல் வாகனத்திற்கு நிரப்பும் ஆட்டோ கேஸ் நிலையங்களில் சட்டவிரோதமாக வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரில் கேஸ் நிரப்பி விற்பனை ! அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்குமா திருப்பூர் மாவட்ட ஆட்சி நிர்வாகம் !?
தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வரும் மாவட்டங்களில் திருப்பூர் முதன்மையாக உள்ளது.
ஜவுளி நிறுவனங்கள் தான் இங்கு பிரதானம் என்றாலும் கட்டுமானம், தூய்மைப் பணி என்று பல வேலைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் பின்னலாடை தொழிலை வடமாநிலத்து தொழிலாளர்கள் இல்லாமல் இயக்க முடியாத நிலையில் உருவாக்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் இருக்கலாம் என ஜவுளி நிறுவனத்தினரும் 2 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் இருக்கலாம் என தொழிற்சங்கத்தினரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித துல்லிய தரவுகளும் கிடையாது.திருப்பூருக்கு வேலைக்கு வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் தான் தங்குமிடம் ஏற்படுத்தித் தருகின்றன. பெரும்பாலானோர் வாடகைக்கு வீடு எடுத்து சேர்ந்து வசித்து வருகின்றனர். 10க்கு 10 அறைக்கு ரூ.3,500 வரை வாடகை உள்ளது. நான்கு, ஐந்து நபர்கள் சேர்ந்து தான் வசித்து வருகிறார்கள்” இவர்கள் அனைவரும் அவர்களே உணவை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைத்து சாப்பிடுவதற்கு தற்போது மண்ணெண்ணெய் கிடைக்காததால் யாரிடமாவது காலி எரிவாயு சிலிண்டர் விலைக்கு வாங்கி வைத்துக்கொண்டு ஆட்டோ கார் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் குறைந்த விலையில் வீட்டிற்கு உபயோகப்படுத்தும் எரிவாயு சிலிண்டரை கொண்டு போய் எரிவாயு நிரப்பி அதை வைத்து பெரும்பாலான கூலித் தொழிலாளிகள் சமைத்து சாப்பிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்குக் காரணம் 14.2 கிலோ எரிவாய்வு சிலிண்டர் 1000 ரூபாய்க்கு வாங்க வேண்டும். அதைவிட குறைவாக வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிவாயு கிடைப்பதாக அதை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதைவிட அதிர்ச்சி தகவல் என்னவென்றால்.எல்பிஜியை வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது இந்தியாவில் ஏப்ரல் 24, 2000 முதல் நடைமுறைக்கு வருவதற்கு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது, இந்த எரிபொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் ‘ஆட்டோ காஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்கிறது.இருப்பினும் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குள். இதுவரை, பல்வேறு நகரங்களில் இயங்கும் ஆயிரக்கணக்கான எல்பிஜி வாகனங்கள், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம், மிகவும் பாதுகாப்பற்ற நடைமுறையை சட்டவிரோதமாக செய்து வருகின்றன. அப்படி உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வரும் வாகன உரிமையாளர்கள் எரிவாயு தீர்ந்து விட்டால் அந்த சிலிண்டரை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து எல்பிஜி ஆட்டோ கேஸ் நிலையங்களில் நிரப்பி எடுத்துச் செல்வதாகவும் இப்படி எரிவாய்வு சிலிண்டரில் நிரப்பி எடுத்துச் செல்லும் போது எந்த நேரத்திலும் மிகப்பெரிய விபத்து ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். எழுந்துள்ளது.இது சம்பந்தமாகசமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பான நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அலுவலர் ரவிச்சந்திரன், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகள், சமையல் எரிவாயு வினியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அதில் குறிப்பாக திருப்பூர் மாநகரத்தில் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு எரிவாயு நிலையம் நிரப்பும் ஆறு நிலையங்கள் உள்ளது.திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள சட்டவிரோதமாக வீட்டு சிலிண்டர்களுக்கு ஆபத்தை உணராமல் கேஸ் நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய சட்டவிரோத செயலாகும். கார் ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு நிரப்ப வேண்டிய எரிவாயுவை வீட்டு உபயோக சிலிண்டரில் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி விபத்துக்கள் ஏற்படாதவாறு உறுதிசெய்ய வேண்டும்.என நுகர்வோர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ மத்திய மாநில அரசுகளின் சட்ட விதிகளை முறையாக செயல்படுத்தாமல் சட்டவிரோதமாக செயல்படும் எந்த நிறுவன உரிமையாளர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குறிப்பாக திருப்பூரில் ஆட்டோ கேஸ் எரிவாயு நிலையங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீது பொதுமக்களின் நலன் கருதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது