வாக்கு கேட்டு எங்களிடம் வரக்கூடாது.பொதுமக்கள் ஆவேசம்.
அலங்காநல்லூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி புகார்
ஓட்டு கேட்டு வரக்கூடாது என பொதுமக்கள் ஆவேசம்
அலங்காநல்லூர். பிப்.14
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பட்டி ஊராட்சியில்
கொண்டையம்பட்டி சம்பக்குளம் மீனாட்சிபுரம் ஒட்டுப்பட்டி பெருமாள் பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது இந்த கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்கு தலைவராக மலைச்சாமி என்பவரும் துணைத் தலைவராக ரங்கராஜன் என்பவரும் உள்ளனர் ஒன்பது வார்டுகளை கொண்ட கொண்டையம்பட்டி ஊராட்சியில் துணைத்தலைவர் ரங்கராஜன் தவிர மீதி எட்டு பேரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்
இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்
குறிப்பாக சாக்கடை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி மற்றும் கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பிட வசதி சுற்று சுவர் உள்ளிட்ட வசதிகள் மற்றும் முல்லை ஆற்று பாலம் பகுதியில் தடுப்பு சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர கோரி பல்வேறு முறை ஊராட்சி அலுவலகத்திலும் ஊராட்சி மன்ற தலைவர் இடத்திலும் நேரில் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இது சம்பந்தமாக கடந்த காலங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லாததால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
இதுகுறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற தலைவராக மலைச்சாமி என்பவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது இதன் காரணமாக டெங்கு மலேரியா போன்ற நோய்கள் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் இடத்தில் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் தெருவிளக்கும் அடிக்கடி பழுதாகி விடுவதால் அதை சரி பண்ண சொல்லியும் சரி பண்ண வில்லை ஆகையால் அடுத்த முறை வாக்கு கேட்டு எங்களிடம் வரக்கூடாது என்று ஆவேசமாக கூறினர்
மேலும் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடத்திலும் முறைப்படி புகார் அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கொண்டையம்பட்டி அலங்காநல்லூர் சாலையில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடந்த போவதாகவும் தெரிவித்தனர்