வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இரண்டு வருடங்களாக மண்ணில் புதைந்து கிடக்கும் அடி குழாயின் அவல நிலை!!
வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் மண்ணில் புதைந்து கிடைக்கும் அடி குழாயின் அவல நிலை!!
வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சத்யா பால் பண்ணை சாலையில் (சுடுகாடு எதிர் )புகைப்படங்களில் உள்ள ஆழ் துளை கிணறு ( கை பம்பு) அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாயை தோண்டி கழிவுநீர் அடி குழாயில் தண்ணீரில் சேர்ந்து துர்நாற்றம் அடித்ததால் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அந்தக் குழாயை பேரூராட்சி நிர்வாகம் அகற்றி விட்டு பயனற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே போல் சத்யா பால் பண்ணை சாலையில் இருந்த மற்றொரு அடி குழாய் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை திமுக ஆட்சி வந்து கடந்த இரண்டு வருடமாக அந்த அடிகுழாயை பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் தற்போது மண்ணில் புதைந்து காட்சி பொருளாக காணப்படும் அவல நிலை. அந்த அடி குழாயில் தான் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அது மட்டும் இல்லாமல் கோடை காலங்களில் அந்த அடிகுழாய் தண்ணீரை தான் அப்பகுதியில் துக்க நிகழ்ச்சி என்றாலும் சரி சுக நிகழ்ச்சி என்றாலும் சரி பொதுமக்கள் அந்த அடிகுழாயை பயன்படுத்தி வந்து உள்ளார்கள் . 25 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பயன்பாட்டில் இருந்த அடி குழாய் தற்போது பேரூராட்சியின் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் அடி குழாய் மண்ணில் புதைந்து காணப்படுவது வேதனையாக இருப்பதாகவும் இது சம்பந்தமாக பலமுறை பேரூராட்சிக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அடி குழாய் பம்பை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து வரும் கோடை காலத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
! இடம் T. வாடிப்பட்டி , சத்தியா பால்பண்ணை ரோடு , மதுரை மாவட்டம் !(ஆசிரியர் ! “ரிப்போர்ட்டர் விஷன் “)