ஸ்டாலின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டிய நபருக்கு உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பதவியா!?
திமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் 50 லட்சம் ரூபாய் குதிரை பேரம்!? திமுக கட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பாரா!?

திமுக கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் கவுன்சிலர் பதவி. ஒரு மாதத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு சிபாரிசு .அடுத்த மூன்றாவது மாதத்தில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சிபாரிசு .எதற்காக இவருக்கு மட்டும் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் என்று திமுக தொண்டர்களிடையே குமுறலாக உள்ளது.
மே 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அதோடு, சரியாக கட்சிப் பணி செய்யாத மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் பல மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிபோய்விடும் அச்சத்தில் பல அமைச்சர்கள் ஆதரவுடன் தலைமையிடம் சிபாரிசு கேட்டு அனுகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள 10 திமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு தற்போது கடும் போட்டி மும்முனை நான்கு முனை போட்டி எழுந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் மூன்று ஒன்றிய செயலாளர் திருமங்கலத்தில் 3 ஒன்றிய செயலாளர் உசிலம்பட்டியை இரண்டு ஒன்றிய செயலாளர் கள்ளிக்குடி ஒரு ஒன்றிய செயலாளர் கல்லுப்பட்டி ஒரு ஒன்றிய செயலாளர் மொத்தம் பத்து ஒன்றிய செயலாளர் யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் பதவிக்கு மட்டும் போட்டி இல்லாமல் தேர்ந்தெடுப்பார்கள் என்ற தகவல் வந்துள்ளது அதற்கு காரணம் மாவட்டச் செயலாளர் மணிமாரணின் சொந்த ஊர் என்பதால் அங்கு போட்டி இல்லாமல் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக தகவல். மற்ற ஒன்பது ஒன்றிய செயலாளர்கள் யார் என்று அறிவிக்க முடியாமல் மாவட்ட செயலாராக இருக்கும் மணிமாறனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் காரணம் என்ன என்று களத்தில் இறங்கி விசாரித்ததில் மாவட்டச் செயலாளர் மணிமாறன் பல பேரிடம் ஒன்றிய செயலாளர் பதவி வழங்குவதாக பல கோடி ரூபாய் வரை வாங்கி உள்ளதாகவும் ஆகையால் பணம் கொடுத்தவர்கள் யாரும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என்றும் அதனால் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு போட்டி போடுவதால் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர் பதவிகள் அறிவிக்கப்படுவது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
அதில் முக்கியமாக மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வருகிறது. ஏனென்றால் மாவட்டச் செயலாளராக உள்ள மணிமாறன் ஒன்றிய செயலாளர் பதவி வழங்குவதாக தலா 50 லட்சம் ரூபாய் வீதம் 3 கோடி வரை மூன்று நபர்களிடம் பெற்றுள்ளதாகவும் இதில் யாருக்கு ஒன்றியச் செயலாளர் பதவி கொடுக்கலாம் என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் அதில் அஜித் பாண்டி என்பவருக்கு கொடுக்கப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.


அந்த அஜித்பண்டி யார் என்று நாம் விசாரித்தால் அதிர்ச்சியான தகவல்களை திமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.
நடந்து முடிந்த உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்த செல்வி அவரது மகன்தான் அஜித் பாண்டி என்பவர். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தி மு க கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வரும்போது ஸ்டாலின் அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கார் முன்பு கறுப்புக் கொடி காட்டியவர் தான் இந்த அஜித்பண்டி என்று அதிர்ச்சித் தகவல் கொடுத்தனர் .

அதுமட்டுமில்லாமல் இவர் மீது பல பண மோசடி வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளது என்றும் அந்த வழக்குகள் எல்லாமே பண மோசடி கொலை மிரட்டல் வழக்குகளாக பதியப்பட்டுள்ளன .அதுவும் முக்கியமாக பேசப்படும் இரிடியம் மோசடி என்ற வழக்கில் அஜித் பாண்டி பல பேரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்து தற்போது அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.


தற்போது எப்படியாவது உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பதவியை பெற்றுக் கொள்ளலாம் என்று 50 லட்சம் ரூபாய் மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்களிடம் அஜித் பண்டி கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மூன்று பேரிடம் சுமார் 3 கோடி வரை பெற்றுக் கொண்டு நகர சேர்மன் பதவி வழங்குவதாக கூறி கடைசியில் மூன்று பேரையும் ஏமாற்றி அஜித் பாண்டியனுடைய தாய் செல்வி அவர்களுக்கு நகரச் சேர்மேன் வேட்பாளராக திமுக தலைமைக் கழகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார் மாவட்டச் செயலாளர் மணிமாறன். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் திமுக தலைமை அறிவித்த நகர தலைவர் வேட்பாளர் செல்வி மகன் அஜித் பாண்டி மீது அதிருப்தியில் இருந்ததால்தான் மறைமுக தேர்தலில் திமுக தலைமை அறிவித்த செல்வி அவர்களுக்கு திமுக வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற 18 பேர் வாக்களிக்க வில்லை என்றும் அதுமட்டுமில்லாமல் உசிலம்பட்டி நகராட்சித் தேர்தலில் 24 வார்டுகளில் ஐந்து வார்டுகளில் திமுக பெண் வேட்பாளர்கள் ஐந்து வார்டுகளில் போட்டியிட்டனர் அந்த ஐந்து வேட்பாளர்களையும் தோற்கடிக்க அஜித் பாண்டி அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் ஒவ்வொரு வார்டில் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக 5 லட்சம் வீதம் 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஐந்து திமுக பெண் வேட்பாளர்களை தோற்கடிக்க அஜித் பாண்டி முயற்சி செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் தற்போது வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர்களை எதிர்த்து அஜித் பாண்டி வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளனர். இதையெல்லாம் உசிலம்பட்டி பகுதி திமுக தொண்டர்கள் மனதில் வைத்துக்கொண்டு உசிலம்பட்டி நகர சேர்மேன் மறைமுக தேர்தலில் மாவட்ட இலக்கிய அணி கே விஜய் அவர்களின் தாயார் சகுந்தலா அவர்களுக்கு ஒரு மனதாக வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் என்ற தகவலைத் கொடுத்துள்ளனர். ஆகவே தற்போது திமுக அறிவித்த வேட்பாளர் செல்வி அவர்களை தோற்கடித்த காரணத்தினால் 5 திமுக நிர்வாகிகள் மீது திமுக தலைமை கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது.
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாரணை எதிர்த்து சட்டமன்ற தேர்தல் மற்றும் நகராட்சி தேர்தலில் வேலை செய்த அஜித் பாண்டிக்கு உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பதவி அறிவிக்கக் கூடாது என்று பெரும்பான்மையான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுக கழகத் தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இன்னும் இரண்டு நாட்களில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு யார் என்பதை அறிவிக்க இருக்கும் நிலையில் தற்போது உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் திக்குமுக்காடி கொண்டு இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதற்கு காரணம் ஒரு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு 3 நபரிடம் பணம் பணம் வாங்கி இருந்தாலும் பணம் கொடுத்த நபர்கள் கடந்த காலங்களில் திமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்றும் அவர்கள் யாருக்கும் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பதவி வழங்கக்கூடாது என்று திமுக தொண்டர்கள் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதே மதுரை புறநகர் தெற்கு திமுக மாவட்டச் செயலாளர் மணிமாறன் எம்எல்ஏ ஆவதற்கு முட்டுக்கட்டை போட்ட திருமங்கலம் ஸ்ரீதர் இரண்டுமுறை திமுக கட்சியால் நீக்கப்பட்டவர்.
அதே போல உசிலம்பட்டி S.O.R தங்கப்பாண்டி இருமுறை திமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் ஆவார்கள்.ஆனால் அவர்கள்
இரண்டு பேரிடமும் சுமார் தலா 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தற்போது ஸ்ரீதருக்கு திருமங்கலம் நகரச் செயலாளர் பதவியையும் SOR தங்கப்பாண்டிக்கு உசிலம்பட்டி நகர செயலாளர் பதவியை திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவிக்க இருப்பதாக பரவலாக பேசப் படுவதால் அப்பகுதி திமுக தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னை திமுக தலைமைக் கழகத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பதவிக்கு பெரும் தொகை கொடுத்திருப்பதாகவும் அஜித் பாண்டியுடன் நெருக்கமாக இருப்பவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
எது எப்படியோ கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் திமுக கட்சிக்கு எதிராக வேலை செய்த யாராக இருந்தாலும் அவர்களுடைய பின்னணியை தெரிந்து அவர்களுக்கு தற்போது திமுகவில் உறுப்பினராக சேர்த்து பதவி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த அடிமட்ட திமுக தொண்டர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பதை அந்தப் பகுதியில் காணமுடிகிறது.
இன்னும் பத்து வருடங்களுக்கு திமுக தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்யப் போவதை தெரிந்து கொண்ட சில விஷக்கிருமிகள் திமுக கட்சிக்குள் நுழைந்து திமுக கட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் நோக்கில் கடந்த அதிமுக ஆட்சியில் மோசடி செய்து வைத்துள்ள பணத்தை வைத்து திமுக கட்சியில் நுழைந்து பதவிகளை பெற்றுகொள்வதற்கு தீவிரம் காட்டுவதை திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் அடிமட்ட திமுக கட்சித் தொண்டர்கள் அனைவரின் வேண்டுகோளாகும். பொறுத்திருந்து பார்ப்போம் திமுக தலைமையின் நடவடிக்கையை.