மாவட்டச் செய்திகள்

10 அம்ச நீண்ட நாள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட  ஆட்சியரிடம் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மனு!

நீண்ட நாள் கோரிக்கைகள் மீது தேனி மாவட்ட புதிய ஆட்சியர் நடவடிவடிக்கை எடுக்குமாறு பெரியார் வைகை பாசன விவசாயிகள்  சங்க நிர்வாகிகள் !!


தேனி மாவட்டம்
பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில்
சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் சார்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான 10 அம்ச கோரிக்கைகளை பரிந்துரை செய்யுமாறு தேனி மாவட்ட ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கிய போது!

தேனி மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம்தேனி மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். கேரள மாநிலத்தோடு நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாவட்டத்தில், கண்ணுற்ற  சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்

(1)  T.சிந்தலைச் சேரியில் உள்ள உடைகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் இருக்கிறது. ஆனாலும் கூட இன்று வரை ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பரிந்துரைக்கிறோம்.

(2)தேவாரத்திலிருந்து கேரளாவை இணைக்கும் சாக்கலூத்து மெட்டு சாலை போக்குவரத்து தொடர்பாக பல வழிகாட்டுதல்கள் அரசால் கொடுக்கப்பட்டிருக்கிறது.நாளொன்றுக்கு எட்டாயிரம் தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு பணிக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கருதி இரண்டரை மீட்டர் உரிமைப் பாதையை சாலை போக்குவரத்திற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(3)சின்னமனூரில் இருந்து அம்மச்சியாபுரம் வரை முல்லைப் பெரியாறு ஆற்றின்  இரு கரைகளிலும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(4)போடி தாலுகாவில் உள்ள முதுவாக்குடியில் வாழும் பழங்குடி மக்களுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வீடுகள் கட்டிமுடிக்கப் படவில்லை. முறைகேடுகளும் நிறைய நடந்திருக்கிறது. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5-கம்பம் பள்ளத்தாக்கில் அபரிமிதமாக விளையும் திராட்சை கொள் முதலை அரசே ஏற்று நடத்துவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட வேண்டும்.

6-கண்ணகி கோவில் தொடர்பாக, கம்பத்தை சார்ந்த கண்ணகி அறக்கட்டளை என்கிற அமைப்பு கேரள மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருக்கிறது. எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தால் கேரள மாநில அரசுக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவிலை கைவசப்படுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தடையாக இருக்கும் வழக்குகளைப் போட்ட கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

7-பளியங்குடி முதல் கண்ணகி கோவில் வரை பாதை அமைப்பதற்கு அரசு முன்னெடுப்பை செய்திருக்கும் நிலையில் அந்த பணிகளை உறுதிப்படுத்தி விரைவு படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

8-உரிய அனுமதி இன்றி மேகமலையில் செயல்பட்டு சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரிய கேடை விளைவித்துக் கொண்டிருக்கும் தனியார் சொகுசு விடுதிகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதோடு, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கி உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்த வேண்டும்.

9-வெள்ளிமலை வனச்சரகத்திற்குள் அத்துமீறி விவசாயம் செய்கிறோம் என்கிற போர்வையில் அங்குள்ள வனவிலங்குகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டும், மூல வைகையின் நீர் ஆதாரத்தில் நஞ்சை கலந்து கொண்டிருக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10-டாப் ஸ்டேஷன் அருகே உள்ள தமிழகத்திற்கு சொந்தமான எல்லப்பட்டி வனப்பகுதியில் தற்காலிக குடில்கள் *campshed* என்கிற பெயரில் சட்டவிரோத விடுதிகளை நடத்திக் கொண்டிருக்கும் ஆபத்தான நபர்களை அடையாளம் கண்டு எல்லப்பட்டி மற்றும் கொழுக்குமலை வனப்பகுதிகளில் இதுபோன்று நடக்கும் தற்காலிக குடில்களை இழுத்து பூட்ட வேண்டும். கொட்டக்குடி பஞ்சாயத்து நிர்வாகத்தால் பல்வகை ரசீது என்கிற பெயரில் அந்த குடில்களுக்கு வழங்கப்படும் ரசீதுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விவசாயம் சார்ந்து மட்டும் நாங்கள் இயங்காமல், சுற்றுச்சூழல், மலை வளம், மழை வளம் நிலத்தடி நீராதாரம் என்று இயங்கி வருகிறோம் .
இந்த 10 கோரிக்கைகள் மீது தேனி மாவட்ட ஆட்சியர்
நடவடிக்கை எடுக்க வேண்டி
  மனு கொடுத்த நிர்வாகிகள்.
இ.சலேத்து.பொன்.காட்சி கண்ணன்.
ச.அன்வர் பாலசிங்கம்.
தேவாரம் மகேந்திரன்.
பா. ராதா கணேசன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button