மாவட்டச் செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 வருட பாரம்பரிய அரசு பள்ளி ஒன்றை ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் வைத்து பாத்திரப் பதிவு செய்து மோசடி !! மோசடிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பத்திரப் பதிவு ஐஜி யிடம் புகார்!

போலி ஆவணங்கள் வைத்து பாத்திரப் பதிவு !!
புதுக் கோட்டை மாவட்டம் கோவிலூர் வட்டம் கந்தவரக் கோட்டையில் மூன்று பள்ளிகள் உள்ளன. மூன்று பள்ளிகளின் வரலாறு. இதோ..

ஆரம்பப் பள்ளி
1928 ஆம் ஆண்டு
1935ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.

முதலாவதாக
05/07/1928 ஆம் ஆண்டில் ஆரம்ப தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப் பட்டது. இந்தப் பள்ளியில் தான் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆரம்பத்தில் சேர்த்துள்ளனர் .அப்போது கந்தவரக் கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் பட்டுக் கோட்டை தாலுகா வில் இருந்ததாக கூறப் படுகிறது.அப்போது தஞ்சாவூர் மாவட்டக் கலெக்டராக இருந்த ஜே. கிரே என்பவர்தான் திறந்து வைத்துள்ளார். அதன் பின் இந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி உள்ளனர்.
○அதன் பின் அரசு உயர் நிலைப் பள்ளி 14/07/ 1935 ஆம் ஆண்டு தற்போது மாரியம்மன் கோயில் செட்டித் தெருவில் உள்ள முருகையா திருமண மண்டபம் இருக்கும் அதே இடத்தில் இருந்து உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் 1970 இல் மிகவும் மோசமாக இருந்துள்ளது.

அதன் பின் வேறு இடத்தில் 1970 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது

1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
அரசு உயர் நிலைப் பள்ளி கந்தவர்கோட்டை
பள்ளியில் இருக்கும் 1971 ஆம் ஆண்டு இந்தியாவிடுதலைப்பெற்று
25 ஆம் ஆண்டு நினைவுச் சின்னம்

பள்ளிக் கட்டிடம் அதன் பின் 1971 இல் இந்தப் பள்ளி செயல்பாடுக்கு வந்தது. இந்தப் பள்ளியில் முக்கிய அம்சமாக இந்தியா விடுதலைப் பெற்று 25ஆம் ஆண்டு ஆதாவது வெள்ளிவிழா நினைவுச் சின்னமுமும் நிறுவப் பட்டு உள்ளது.இந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை ஆண் பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியாக இருந்துள்ளது. அதற்குப் பிறகு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தனியாக வகுப்புகள் கட்டப் பட்டு மாணவிகள் படித்து வந்துள்ளனர். இப்போது அந்தப் பள்ளி ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.
அப்போது இந்தப் பள்ளி திருவோணம் ஒன்றியத்தில் இருந்துள்ளது.

50 வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க் கோட்டை தாலுக்கா கோவிலூர் வட்டத்தை சேர்ந்த வேணுகோபால் செட்டியார்
கந்தவரக் கோட்டை அரசினர் மேல்நிலை பள்ளிக்கு தானமாக வழங்கிய (சர்வே எண் 185/7 ) சுமார் 1.50 ஏக்கர் (148 சென்ட்) தற்போது 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி வாரிசு போலி இறப்புச் சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்கள் வைத்து கடந்த 5/03/2022 அன்று புனித வதி மாரியப்பன் என்பவர் தனது மகள் சாந்தி சுகுமார் என்பவருக்கு தான செட்டில் மெண்ட் ஆவணம் பதிவு செய்து மேற்படி இடத்தை அவர் பெயருக்கு மாற்றி பாத்திரப் பதிவு செய்து மோசடி செய்துள்ளனர்..



இந்த மோசடிக்கு போலி வாரிசு இறப்பு மற்றும் ஆவணம் தயார் செய்து கொடுத்து மூளையாக செயல்பட்ட கந்தவர் கோட்டை SRS கம்பியூட்டர் சென்டர் உரிமையாளர் ராதா சசிக்குமார் ஆவார்.

மேலும்
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கொண்டையர் தெரு வலையம்பட்டி ராமராசு த/பெ அப்பு மற்றும் யாதவர் தெரு காந்தவரக் கோட்டையைச் சேர்ந்த வீரம்மாள் W/O குமார் இவர்கள் இரண்டு பேரும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளனர்.


போலி ஆவணங்கள் என்று தெரிந்தும் பல லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு மோசடிக் கும்பலுக்கு சட்டத்துக்கு புறம்பாக சட்டவிரோதமாக பதிவு செய்து கொடுத்துள்ளார் சார் பதிவாளர் ..ஆகாயால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு பள்ளி நிலத்தின் மோசடியாக பத்திரபதிவு செய்ததை உடனே ரத்து செய்து இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் உடனே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என்று முன்னால் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் அனைவரும் சேர்ந்து பத்திரப் பதிவு ஐ ஜி க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button