மாவட்டச் செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில் செயலி மூலம் வருகை பதிவு பயனாளிகளின்
புகைப்படத்தை பலமுறை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட
வாடிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!

மதுரை மாவட்டம் டீ வாடிப்பட்டி.மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. 2009-ம் ஆண்டு இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என பெயர் மாற்றப்பட்டாலும், தமிழக கிராமப்புற மக்களால் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதால், கிராமப்புற ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்படுகிறது.

இந்த திட்டத்தில் தனிநபர் கழிப்பறைகள் உருவாக்கப்படுவதால் கிராமப்புறங்களில் சுகாதார மேம்பாடும், நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நடுவதால், இயற்கை வளமும் மேம்படுத்தப்படுகிறது. ஒரு நபருக்கு தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.281 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 37 மாவட்டங்களில் இத்திட்டத்தில் 94 லட்சத்து 78 ஆயிரத்து 824 பேர் பயனாளிகளாக உள்ளனர்.
இத்திட்டப் பணிகளை மேற்பார்வை செய்ய பணித்தள பொறுப்பாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 9 மணி முதல் 11 மணிக்குள்ளும், மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள்ளும் இரு வேளை பணியாளர்களின் வருகை பதிவு செய்யப்படும். கிராமப்புற மக்களுக்கு பயனளித்துவந்த இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மின்னணு வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மின்னணு வருகை பதிவேடு முறையில்,செவ்வாய்க்கிழமைதோறும் பயனாளிகளிடம் பெறப்படும்.


இந்நிலையில், அனைத்து பணிகளுக்கும் என் எம் எம் எஸ் (தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு செயலி) மூலம் வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனால் இதுவரை 20 பணியாளர்கள் இருந்தால் மட்டுமே வருகை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, ஒன்று முதல் 19 பணியாளர்கள் வரை இருந்தாலும் வருகை பதிவு செய்ய முடியும் என மாற்றம் செய்யப்பட்டது.
இந்த செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ளாத பணிகளில் பணிபுரிந்த பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், அனைத்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் ஆகியோருக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.
செயலி மூலம் காலையும், மதியமும் பயனாளர்களின் புகைப்படங்கள், பணித்தளம் ஆகியவை ‘ஜியோடேக்’ செய்யப்படுகின்றன.
ஆனால் இதிலும் பயனாளிகளின் புகைப்படத்தை பல பலமுறை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் முறைகேடு நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
அதற்கு உதாரணமாக வேலை


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூச்சம்பட்டி ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை உறுதி திட்ட செயலாளக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன மேலும் இது தொடர்பாக வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் என் எம் எம் எஸ் செயலி மூலம் மக்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தை பலமுறை பயன்படுத்தி 100 நாள் வேலை திட்டத்தில் இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த முறை கேட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அளித்த பரிந்துரையின் பேரில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணையில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் சில பகுதிகளில் ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து

ஆண்டிபட்டி ஊராட்சி செயலாளர் செல்வம்

வாடிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஆண்டிபட்டி ஊராட்சி செயலாளர் செல்வம் ஆகியோரை பணியிடை நீக்கம்  செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது மேலும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி பணி மேற்பார்வையாளர்  சிவரஞ்சித் ஆகிய இரண்டு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையை கலெக்டர் சங்கீதா எடுத்துள்ளார் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு  நடைபெற்றதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதே போன்று மேலும் சில ஊராட்சிகளில் நடைபெற்று இருப்பதாகவும் ஆகையால் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

Back to top button