மாவட்டச் செய்திகள்

5.5 கோடி ரூபாய் நிதியில் ஊழல் முறை கேடு !?சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் 100 ஆண்டு பாரம்பரியமிக்க சோழவந்தான்அரசன் சண்முகனார் பள்ளி  விளையாட்டு மைதானம்! நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

5.5 கோடி ரூபாய் நிதியில் ஊழல் முறை கேடு !?சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் 100 ஆண்டு பாரம்பரியமிக்க அரசன் சண்முகனார் பள்ளி  விளையாட்டு மைதானம்! நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

சோழவந்தான் அரசன் சண்முகனார் மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் 5.5 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 4வது வார்டு ஆலங்கொட்டாரம் பகுதியில் உள்ள
அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு

அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


அரசன் சண்முகனார்  மேல்நிலைப்பள்ளி
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க இந்த பள்ளியில் தமிழக முன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் மற்றும்  தமிழகம் மற்றும் இந்திய அளவில் தற்போது முக்கிய உயர் பதவி வகிக்கும் பலர் படித்த பெருமைக்குரியது இந்த பள்ளி .


இந்தப் பள்ளியானது சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு சிறந்த மாணவர்களை கடந்த 100 ஆண்டுகளில் உருவாக்கி வந்துள்ளது
தற்போது 100 ஆண்டு பாரம்பரிய பள்ளி விளையாட்டு மைதானத்தில்

சமூக விரோதிகளின் தொடர் வன்முறை செயலால் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக  நூறாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியை மேம்படுத்துவதற்காகவும் பள்ளியின் விளையாட்டு மைதானம் மற்றும் மைதான சுற்றுச்சுவரை மேம்படுத்துவதற்காகவும் தமிழக சட்டமன்ற பணி நியமன குழு பார்வையிட்டு கடந்தாண்டு தமிழக தொல்லியல் துறை சார்பில் சுமார் 5.5 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி பள்ளியின் பாரம்பரியமிக்க கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையிலும் விளையாட்டு மைதானத்தில் இருந்த பராமரிப்பு இல்லாத சுற்றுச்சவரை எடுத்துவிட்டு புதியதாக பாதுகாப்பான முறையில் மாணவர்களுக்கும் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர்கள் பயன்படும் வகையிலும் சுற்றுச்சவர் அமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொல்லியல் துறை சார்பில் ஒதுக்கிய 5.5 கோடி ரூபாய் நிதியை முறையாக செலவு செய்யாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இது குறித்து முன்னாள் ராணுவ படை வீரர் கூறுகையில் தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் பணிகளில் முக்கியமானது .


பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி அமைக்கப்படும் சுற்றுச்சுவர்
ஆனால் இந்த சுற்றுச்சுவர் பல இடங்களில்

ஏற்கெனவே இருந்த சுற்று சுவரை அப்படியே பெயிண்ட் அடித்து சரிபார்க்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சுற்றுச்சுவர் அருகில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் விளையாட்டு  மைதானத்திற்குள் வருமாறு
சுற்றுச் சுவரின் பல்வேறு இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட  துளையிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்

இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுற்றுச்சுவர் துளைகள் வழியாக விளையாட்டு மைதானங்களில் வருவதால் இங்கு பயிற்சியில் ஈடுபடும்  மாணவர்கள் மற்றும் நடை பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் முதல் முதியவர்கள் மற்றும் அரசு பொது தேர்வுகளில் விளையாட்டு பிரிவுகளில் மதிப்பெண் எடுப்பதற்காக இங்கு வரும் மாணவ மாணவிகள்  கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக குடியிருப்பு வாசிகளுக்கும் விளையாட்டு பயிற்சிக்கு வருபவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறுவதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பள்ளி பராமரிப்பு பணி ஒப்பந்ததாரிடம் கூறினால் முறையாக எந்த ஒரு பதிலும் தெரிவிப்பதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்
மேலும் சுற்றுச்சுவர் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதால் மாலை நேரங்களில் மது கஞ்சா போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் மைதானத்திற்குள்  மது அருந்துவதால் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்படுகிறது என்றும் காலி மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் நடை பயிற்சியில் ஈடுபட்டு வரும் விளையாட்டு வீரர்களின் கால்களை காலி பாட்டில்கள் பதம் பார்க்கும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
இங்கு நடை பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்களால் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் மதுரை மாவட்ட நிர்வாகம்  இந்தப் பகுதியை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுற்று சுவரில் துலையிட்டு கழிவுநீரை விளையாட்டு மைதானத்திற்குள் வருமாறு பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரரின் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் காலை  மாலை நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும் தொல்லியல் துறை சார்பில் ஒதுக்கப்பட்ட 5.5 கோடி ரூபாய் நிதியை  பராமரிப்பு பணிக்கு முறையாக பயன்படுத்துகிறார்களா என  ஒப்பந்ததாரிடம் உரிய விசாரணை செய்து முறை கேட்டில் ஈடுபட்டிருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்து நியாயமான நேர்மையான முறையில் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் விளையாட்டு வீரர்கள் மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


பேட்டி
1.ரஜினி பிரபு விளையாட்டுப் பயிற்சியாளர்!
2.சவுந்தரபாண்டி
கிராம பொதுமக்கள்
3. அருண் கருப்பையா முன்னாள் ராணுவ வீரர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button