Watch “தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை செயல் அலுவலரின் தொடர் அராஜக போக்கு! மக்கள் கொந்த்தளிப்பு!” on YouTube
தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை மாவட்ட செயல் அலுவலர் முத்துராமன்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் புதூர் மற்றும் மூன்று கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துராமனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து வட்டாட்சியர் பொதுமக்களிடம் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள புதூர் மற்றும் அருகில் உள்ள இரண்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கிராம பொது பல லட்ச ரூபாய் செலவில் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்தான் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் திடீரென்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் இருந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்று காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று கிராம பொதுமக்களும் இந்து சமய அறநிலைத்துறை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக கிராம பொதுமக்கள் கூறியதாவது. கிராமத்தில் உள்ள அனைத்து கோயில்களும் எங்களுடைய மூதாரையர்கள் சொந்த பணத்தில் கட்டிய கோவில்களாகும் அந்த கோவில்களை காலம் காலமாக சொந்த செலவில் பூஜைகள் செய்து கிராமப் பொதுமக்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து பராமரித்து வருகிறோம். கோவில்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து இந்து சமய அறநிலைத்துறை இடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் எந்த அனுமதி கடிதமும் தராமல் நாங்கள் கும்பாபிஷேக வேலைகள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்ட இருந்து கொண்டு தற்போது அனைத்து பணிகளும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கவிருந்த முதல் நாள் இந்த கும்பாபிஷேகத்திற்கு அனுமதி தர முடியாது என்று இந்து சமய அறநிலைத்துறை செயலாளர்கள் முத்துராமன் தடுத்து எங்கள் கிராமத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளார் என்று கூறினார்கள். E O முத்துராமன் அவர்களிடம் அனுமதி கேட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் எங்களை யாரையும் நேராக பார்த்து பேசவும் இல்லை . யாரோ ஒருவருடைய சுயலாபத்திற்காக செயல்பட்டு வருவதாகவும் கோவில் கும்பாபிஷேகம் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தி அலட்சிய போக்கை கடைபிடித்து வருவதாகவும் இதனால் தற்போது மூன்று கிராமத்து மக்கள் இடையே மோதல் கோட்டை உருவாக்கியுள்ளார் செயல் அலுவலர் முத்துராமன் என்று குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ இரண்டு மாதங்களுக்கு முன்பு கிராமம் சார்பாக கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு கொடுத்த கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் திடீரென்று கோவிலுக்கு அனுமதி இல்லாமல் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று இந்த அராஜக போக்கை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விசாரணை நடத்தி முத்துராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாகும்.