Watch “மத்திய அரசை கண்டித்து சிபிஐ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக முழுவதும் சாலை மறியல் போராட்டம்!!” on YouTube

கடந்த எட்டு வருடங்களாக பிஜேபி ஆட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக சாமானிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சாமானிய பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு மற்றும் இரண்டு சக்கர வாகனத்திற்கு போடும் பெட்ரோல் விலை மற்றும் அத்தியாவசிய அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியை சுமத்தி திக்குமுக்காடா வைத்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.
பெட்ரோல் ₹65/- லிருந்து 109/-க்கும் டீசல் ₹55/- லிருந்து ₹95/- க்கும் எரிவாயு (Gas cylinder) ₹450/- லிருந்து ₹ 1080/- க்கும் இந்த எட்டு ஆண்டுகளில் உயர்ந்துவிட்டது. 50% லிருந்து 100% வரை உயர்ந்துவிட்டது.
உப்புக்கு வரி போட்ட வெள்ளைக்காரனை எதிர்த்து போராடினோம் ஆனால் இன்று அரிசிக்கு வரி கட்ட வேண்டியநிலைமைக்கு போய்விட்டோம்.
மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் !அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிமற்றும் பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வை ரத்து மற்றும் மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்பாட்டம் !!
தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்ம் நடைபெற்ற நிலையில்,தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கனரா வங்கி முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து, அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்திடக் கோரியும், பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வை ரத்து செய்திடக் கோரியும், மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்திடக் கோரியும், சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடக் கோரியும், போடிநாயக்கனூர் ஒன்றியச் செயலாளர் பி. மணிகண்டன், போடிநாயக்கனூர் நகர துணைச் செயலாளர் பி.முருகேசன் தலைமையில், ஏஐடியூசி தேனி மாவட்டப் பொதுச் செயலாளர் என்.ரவிமுருகன் உட்பட, இருபதிற்கும் மேற்பட்டோர், மத்திய அரசிற்கு எதிரான கண்டன முழக்கங்களையும், கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு,தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.