சினிமா பிரபலங்கள்

அதி புத்திசாலித்தனத்தால் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் குடியேறிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் !

இருளில் மூழ்கி இருக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வீடு மற்றும் ஸ்டுடியோ!
குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் தஞ்சம்!


தானே தன்னை சூனியம் வைத்துக் கொள்வார்கள் என்று பழமொழி உள்ளது. தற்போது முன்னணி இசை அமைப்பாளர் தன்னைத் தானே சூனியம் வைத்தார் போல் ஒரு அதி புத்திசாலித்தனமான செயலை செய்துள்ளார்.

, சென்னை வளசரவாக்கத்தில் சிவன் கோயில் பின்புறம் உள்ள ருக்மணி தேவி தெருவில் வசித்து வருகிறார்.

வீட்டுடன் அவரது ஸ்டூடியோவும் பிரம்மாண்டமாக உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டை வெள்ளை சூழ்ந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இருந்து வெள்ள நீர் டிசம்பர் 05 ஆம் தேதி வெளியேற்றப்பட்டது .

அந்த தண்ணீரில் ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் வைத்திருந்த கார் மற்றும் ஜெனரேட்டர் போன்ற இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் தண்ணீரில் கலந்து தெருக்களில் ஆறாக ஓடியது. உடனே அப்பகுதி மக்கள் இதனால் தங்களுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டதாகவும்
தொற்று நோய் பரவுமோ என்ற அச்சத்தில் மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் அளித்தனர் உடனே மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்ற கூடாது என எச்சரிக்கை
விடுத்து சென்றனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டதால் தான் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இடம் எப்பவும் போல மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.
அதன் பின்பு ஹாரிஸ் ஜெயராஜ் தன் வீட்டில் மின்சாரம் இல்லாததால் வீட்டிலிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறாத நிலையில் வீட்டிற்கும் ஸ்டுடியோவுக்கும் சேர்த்து பயன்படுத்தும் அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரை பயன்படுத்த முயற்சி செய்துள்ளார்.அப்போதுஜெனரேட்டர் வெடித்து வீடு முழுவதும் உள்ள மின் இணைப்புகள் சேதம் அடைந்ததால் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஐந்து நாட்களாக தங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ இயற்கை பேரிடர் ஏற்படும் போது சுயநலமாக மற்றும் அதி புத்திசாலித்தனமாக செயல்பட்டால் இப்படித்தான் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது தான் நிதர்சனம்.




.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button