கண்மாயில் இருந்த பல லட்ச ரூபாய் மரங்களை அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக வெட்டி கடத்தல்! கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்! சாட்டையை கையில் எடுப்பாரா தமிழக முதல்வர்!
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்களை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வெட்டி கடத்தல்!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா காட்டு நாவல் வருவாய் கிராமத்தின் பெரிய ஏரி (காட்டுநாவல் குளம்) ,கரு வேல மரங்கள்வெட்டுவதற்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதன் பெயரில் ஏலம் எடுக்க வந்தவர்களுக்கு அந்த கிராமத்தில் முக்கிய புள்ளிகள் என்றும் அரசியல்வாதிகளின் பின்புலம் கொண்டவர்கள் என்றும் ஏலம் விடப் பட்டுள்ளது..
எடுத்தவர்கள் கண்மாய் கரையில் உள்ள மரங்களை மட்டும் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்த அவர்களுக்கு அரசியல்வாதிகளின் பின்புலம் இருப்பதாக சொல்லி கொண்டு கண் மை கரையில் இருக்கும் மரங்களை வெட்டுவதுடன் கண்மாயில் உள்ளே இருக்கும் அனைத்து மரங்களையும் சட்டவிரோதமாக அரசு அனுமதி இல்லாமல் வெட்டி கடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
சட்டவிரோதமாக கண்மாய் உள்ள மரங்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்துச் செல்ல வெட்டி முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் நீர் பாசன சங்க தலைவர் ஆகியோர் உடந்தையாக செயல் படுவதாகவும் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அமைச்சரின் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஏலம் விடக் கூடாது என மிரட்டி , யாரையும் ஏலத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
கரையில் இருக்கும் மரங்களை மட்டும் வெட்டி எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு நூதன முறையில் கண்மாய் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களையும் வெட்டி வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் சமூக
கண்மாயில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளிலும் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது