கனரக டாரஸ் லாரிகளில் அளவுக்கு அதிகமாக (30 டன் வரை) திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல்! தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்கள்! கண்டுகொள்ளாத உடுமலை உட் கோட்ட காவல்துறையினர்!
தமிழக முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியர்கள் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக மேற்கு மாவட்டங்களான திருப்பூர் கோவை சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத கல் குவாரிகளில் பெரும்பாலானவை எந்தத் தடையும் இல்லாமல் இப்போதும் செயல்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுக்கப்பட்டாலும் கூட அதன் மீது மாவட்ட ஆட்சியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் தமிழகத்தின் கனிம வளம் கேரளத்துக்கு கடத்தப்படும் நிலையில், ஒரு சில லாரிகளை மட்டும் பிடித்து கனிமவளக் கொள்ளையை தடுத்து விட்டதாக காவல்துறையும், அதிகாரிகளும் கூறிக் கொள்கின்றனர். ஆனால், கடத்தல் தொடர்கிறது. அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்துமே கனிம வளக் கடத்தல்காரர்களுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தமிழகத்தின் கனிம வளங்கள் கேரளத்தால் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. அதற்காக தென் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சட்டவிரோத கல்குவாரிகளை மூடி சட்டவிரோத கல்குவாரிகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சி நிர்வாகம் மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து கல், மண் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கேரளத்துக்கு கடத்தப்படுவது அன்றாட நிகழ் வாகிவிட்டது. தமிழகத்தின் இயற்கையையும், சூழலையும் சீர்குலைக்கும் இச் செயல்களை தடுக்க அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிகள், செயற்கை மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கனரகத் டாரஸ் லாரிகள் மூலம் கேரளத்துக்கு கடத்தப்படுகின்றன. இந்த இரு மாவட்டங்களில் இருந்து மட்டும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் கூடுதலான லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. கனரக டாரஸ் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்கள் அனைத்துமே சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுபவை ஆகும். இந்த கனிம வளக் கொள்ளையை அனுமதிக்க முடியாது. கனிமவள கடத்தல்களால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் எல்லையில்லாதவை.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படும் கனிம வளங்கள் மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப் படுபவை அல்ல. மாறாக பூமிக்கு அடியில் 100 மீட்டருக்கும் கூடுதலான ஆழத்தில் உள்ள பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து அதன் மூலம் கிடைக்கும் ஜல்லி உள்ளிட்ட பொருட்களைத் தான் கனரக டாராஸ் லாரிகள் மூலமாக பலரும் கேரள எல்லைக்குள் கடத்திச் செல்கின்றனர். இந்த நடைமுறை ஆபத்தானது. தமிழகத்தின் கனிம வளங்கள் கேரளத்தால் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. அதற்காக தென் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல் குவாரிகள் அனைத்தையும் அரசு மூட வேண்டும். தமிழக கேரளா , மாநில எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் கனிம வளம் கடத்தப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினர் கையூட்டு பெற்றுக் கொண்டு கனிம வளம் கடத்திச் செல்லும் லாரிகளை அனுமதித்து வருவதாகவும் சோதனைச் சாவடிகளில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்தி கோவை திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஐஜி அவர்கள் கடுமையான நடவடிக்கை. எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கனிம வளக்கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் காவல்துறை உட்பட அனைத்து அதிகாரிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். mஆனால் காவல்துறையும் மாவட்ட ஆட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் சமூக ஆர்வலர்கள் சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்திச் செல்லும் லாரிகளை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர். அப்படி ஒப்படைக்கும் கனிம வளம் கடத்திச் செல்லும் டாரஸ் லாரிகளை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு அந்த லாரிகளை பறிமுதல் செய்யாமல் அந்த லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் நீர்த்துச்செய்யும் வகையில் காவல்துறையினர் காலதாமதம் செய்து வருவதால் காவல் நிலையங்கள் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்துவதன் மூலம் ஒரு சில லாரிகளை பறிமுதல் செய்து அந்த லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபதாரம் விதிப்பதாக தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் தான் சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் காவல் நிலையத்தில் TN 57 BM 8532 எண் கொண்ட கனரக டாரஸ் லாரியில் அனுமதி இன்றி அளவுக்கு அதிகமாக சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் தமிழக விவசாயிகள் தங்கம் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் காவல்துறை அவசர கட்டுப்பாட்டு அறை 100 எண்ணிற்கு தகவல் கொடுத்ததன் பெயரில் குடிமங்கலம் காவல்துறையினர் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அந்த டாரஸ் லாரியில் அனுமதிக்கப்பட்டதை விட சுமார் 30 டன் வரை அதிக எடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு லாரியை கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. உடனே உடுமலை கோட்டாட்சியருக்கு தகவல் கொடுக்காமல் அந்த லாரி உரிமையாளர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் கால தாமதம் செய்து வந்துள்ளனர். அதற்கு லாரி உரிமையாளர் அளவுக்கு அதிகமாக கனிம வளம் எடுத்துச் சென்றதற்கு அவதாரம் கட்டி விட்டேன் என சீட்டைக் காட்டியுள்ளார். அந்த சீட்டை ஆய்வு செய்த தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் அந்த சீட்டை ஆய்வு செய்தபோது உடுமலைப் பகுதியில் லாரி பிடிபட்ட முன் தினத்தில் கேரள மாநிலத்தில் லாரிக்கு அபதாரம் விதித்து உள்ளதாக கண்டுபிடித்து காவல்துறையினரிடம் கூறியும் காவல்துறையினர் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வந்த காவல்துறையினரின் செயல் என்பது யாருக்காக? எதற்காக? ஏன்? என்பதை விரிவான அறிக்கையாக அனைத்து மக்களுக்கும் தெரியும்படி வெளியிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவதற்கு தமிழக விவசாய சங்கத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகப்படியான கனிம கொள்ளை சம்பவங்கள் நடந்தேறும் சூழ்நிலையில் இவ்வாறு கையும் களவுமாக பிடிக்கப்பட்ட கனிம வள கொள்ளை அதிக எடை வாகனத்தையும் கூட நடவடிக்கை எடுக்காமல் அது எங்கிருந்து வந்தது, அதற்கான அனுமதி விபரங்கள் போன்ற எதையும் கண்டுகொள்ளாமல் சட்டத்தின் ஆட்சியை நீர்த்துப் போக செய்யும் வேலையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் உடனடியாக அபராதம் விதித்து அந்த வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது மட்டுமில்லாமல்
தொடர் குற்றங்களில் ஈடுபடும் கனிம வள கொள்ளை வாகனங்களை அரசுடமையாக்க வேண்டும். தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதி, அரசாணை 19 மற்றும் 170 அடிப்படையில் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மாவட்ட ஆட்சி நிர்வாகங்கள் கனிம வள கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காவல் நிலையத்தில் இரவு முழுவது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் சென்ற 4 கனரக வாகனங்கள் மீது திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல்துறையினர் உடுமலை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து பின்பு
(TN 47 BV 5513,KL 40 S 9745,KL 40 T 9745,KL 63 J 6879) நான்கு கனரக டாரஸ் லாரிகள் மீது
வழக்குப்பதிவு செய்து சுமார் மூன்று லட்சம் வரை அபதாரம் வைத்துள்ளனர்.
எது எப்படியோ சமூக ஆர்வலர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் தொடர் கனிம வள கடத்தல்களை தடுத்து நிறுத்த பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் காவல்துறையினரும் மாவட்ட ஆட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருவது தந்துடைப்பு நாடகம் என்றும் நிரந்தர தீர்வு காண கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா. சதீஷ் குமார் மாநில செயலாளர் சட்ட விழிப்புணர்வு அணி
குப்புசாமி மாநில கூட்டுறவு அணி ஒருங்கிணைப்பாளர் அவை தலைவர் திருப்பூர் தெற்கு மாவட்டம் வரதராஜ் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார்
கேசவன் தென்னை அணி செயலாளர் திருப்பூர் தெற்கு மாவட்டம் விஜய சேகர் உடுமலை ஒன்றிய செயலாளர் ஆகியோர் கோரிக்கை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது