லஞ்ச ஒழிப்புத் துறை

கள ஆய்வுக்கு செல்லாமல் கள ஆய்வு மேற்கொண்டதாக அறிக்கையை தயார் செய்து ஆவணங்களை வழங்க  5000 முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் அதிர்ச்சி தகவல்! திருமயம் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை எப்போது!?

புதுக்கோட்டை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட 1 எண் இணை சார்பதிவகம், ஆலங்குடி, அன்னவாசல், குளத்தூர், கீழாநிலை, திருமயம், கந்தர்வகோட்டை, பெருங்கூர், மணமேல் குடி மற்றும் விராலிமலை சார்பதிவகங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களை அவை அமைந்துள்ள வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.
திருமயம் சார் பதிவாளர் அலுவலகம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் தாலுகாவில் அமைந்துள்ளது.


திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில்
சொத்துக்கள், வாடகை ஒப்பந்தங்கள், மற்றும் பிற ஆவணங்களை பதிவு செய்தல்.
பதிவு ஆவணங்களின் வழங்கல்:
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்குதல்.
அரசு முத்திரைத் தொகை வசூல்:
பத்திரப் பதிவுக்கான கட்டணங்களை வசூலித்தல்.
சார் பதிவாளர் அலுவலக எல்லைகளை சீரமைத்தல் ஆகிய அனைத்து பதிவுகளும் திருமயம் சார் பதிவாளர் அலுவலகம் மூலம் நடைபெறுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில்
2019 ஆம் ஆண்டு திருமயம் சார் பதிவாளராக இருந்த மகாலட்சுமி
அரசு முத்திரைத் தொகை செலுத்தி பதிவு செய்யப்பட்ட இடத்திற்கான ஆவணங்களைக் கொடுப்பதற்கு இடத்தின் உரிமையாளர்களிடம் . கள ஆய்விற்கு பிறகு ரூ.3 லட்சம் பணம் கொடுத்தால்தான் பத்திரப்பதிவு சம்பந்தமான ஆவணங்களை திருப்பித்தர முடியும் என லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி
@nextcolumn@ லஞ்ச புகாரில் ஆதாரத்துடன் வந்ததையடுத்து, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அப்போது திருச்சி, டி.ஐ.ஜி யாக இருந்த சுவாமிநாதன்
மகாலட்சுமிக்கு சாதகமாக அறிக்கை அளித்ததால், பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தஞ்சை மண்டல, டி.ஐ.ஜி., சுதாமால்யா விசாரணை அதிகாரியாக மாற்றப்பட்டார்.
ஆனால் மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை டி.ஐ.ஜி. என பலரிடம் புகார் அளித்தும் பல மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பதிவு ஆவணங்களை திருப்பித் தரவில்லை என புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தும் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், திருமயம் சார்–பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில்
குற்றச்சாட்டுக்கள் நிரூபணமான நிலையில் புகாரில் சிக்கிய, சார்பதிவாளர் மட்டுமல்லாது, சாதகமான அறிக்கை அளித்த அதிகாரிகள் ஆகியோர் மீது ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதிவுத்துறை தலைவருக்கு அதிரடி உத்தரவிட்ட. நிலையில் .
திருமயம் சார்பதிவாளர் மகாலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார் என்ற திருமயம் சார் பதிவாளராக இருந்த மகாலட்சுமியின் வரலாற்றை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.
எது எப்படியோ நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து காற்றில் பறக்க விட்டு
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த்

தற்போதும் திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில்  ஸ்ரீகாந்த் என்பவர் சார் பதிவாளராக இருக்கிறார். திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம்
ஊழல் முறைகேடு என்பது தொடர்கதையாக  தான் இருப்பதாகவும் குறைந்ததாக தெரியவில்லை என்றும் திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக அரசு பதிவு பெற்ற பத்திர எழுத்தாளரகள் சிலர் தான் உள்ளனர். பத்திரப்பதிவு ஆலோசர்கள் என்ற பெயரில் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் பத்திரம் தயாரிப்பது அதன்பின் வழக்கறிஞர்களிடம் கையொப்பம் வாங்கி பத்திரம் பதிவு செய்து விடுவார்கள் ஆனால் இங்கேதான் ஊழல் முறைகேடு நடக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பத்திரம் தயாரிக்க அரசு அனுமதி தராத உரிமம் இல்லாத பத்திரம் எழுதுபவர்கள் சார்பதிவாளருக்கு இடைத்தரகர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் இவர்கள் பதிவு செய்ய வழங்கும் ஆவணங்கள் முறையான ஆவணங்கள் இல்லையென்றாலும் லஞ்சம் கொடுத்து பத்திரம் பதிவு செய்து விடுவார்கள் என்று குற்றச்சாட்டை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்
பத்திர பதிவுக்காக செல்லும் சாமானிய ஏழை எளிய பொது மக்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் சார் ஸ்ரீகாந்தை அணுகி பத்திரப்பதிவு செய்ய முடிவது இல்லை என்றும்
திருமயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு அதிகமாக நடப்பதாகவும் பொதுமக்களுக்கு முறையான மற்றும் வெளிப்படையான சேவைகளை பெற, சார் பதிவாளர் ஸ்ரீகாந்த்தை தரகர்களை தவிர்த்து நேரடியாக அணுக முடியவில்லை என திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் ஆண்கள் பெண்கள் என்று பொதுமக்கள் வந்து செல்லும் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது அரசு அதிகாரி போல் நடந்து கொள்ளாமல் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டு நாகரிகம் இல்லாமல் உட்கார்ந்து கொண்டு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
கள ஆய்வு செய்ய 5000 ரூபாய் மற்றும் வாகனம் கொடுத்தால் மட்டுமே அந்த இடத்திற்கு கள ஆய்வு செய்வாராம் திருமயம் பத்திரப்பதிவு அலுவலர் ஸ்ரீகாந்த் அப்படி இல்லையா பெரிய தொகையை இடைத் தலைவர்கள் மூலம் பெற்றுக் கொண்டு கள ஆய்வு செல்லாமலே இடத்தை கள ஆய்வு செய்தது போல் அறிக்கையை தயார் செய்து விடுவார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் முறையான ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு செய்து கொடுத்து மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டி வருவதாகவும் திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்து இதுவரை சோதனை செய்த போது கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சாமர்த்தியமாக திருமயம் ச சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் பதில் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்து கேட்டதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் இந்த பணியில் நீடித்துக் கொண்டு இருக்கிறேன் . என் மீது லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டு பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை என்று ஒற்றை வார்த்தையில் கூறி வாயை அடைத்து விடுவாராம் . எது எப்படியோ தமிழக அரசிற்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வேண்டும் அது மட்டும் இல்லாமல் பத்திரப் பதிவுத்துறையில் சட்டவிரோதமாக முறைகேடு செய்து வருபவர்கள் மீது பத்திரப் பதிவுத்துறை ஐ ஜி அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்து திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் முறைகேடுகள் நடக்கிறதா என விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
பத்திரப்பதிவு துறை ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சாட்டையை சுழற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Articles

Back to top button