சென்னை அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள அனைவருக்கும் பணியிட மாற்றம் அதிரடி உத்தரவு !? விளக்கம் கேட்ட முதல்வர்!? உடனே ரத்து செய்யச் சொன்ன தலைமைச் செயலாளர்!?

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜியாள் சர்மா சென்னை தலைமை கூடுதல் ஆணையர் லோகநாதன் இரண்டு பேரும் போட்ட பணியிட மாற்றம் அதிரடி உத்தரவு!!
உடனே உத்தரவை ரத்து செய்யுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு!!
தமிழக டிஜிபி சைலேந்திரபாபுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் நல்ல உறவு இல்லையா!??
சென்னையில் சாலையில் செல்லும் வாகனங்களை போக்குவரத்து காவலர்கள் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபதாரம் போடுவதால் பல விபத்துகள் நடப்பதாகவும் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் செல்லும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கக் கூடாது என்றும். போக்குவரத்து விதி மீற செல்லும் வாகனங்கள் மற்றும் சிக்னலில் விதிமீறி செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அவதாரம் போட வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளதாக தகவல்.

முக்கியமாக Zomato, Swiggy, Urban போன்ற நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் செல்லும் இரண்டு சக்கர வாகனம் சென்னை மாநகர சாலைகளில் மிக வேகமாக செல்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து நிலையில் அந்த நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களின் இருசக்கர வாகனங்களை கண்காணித்து போக்குவரத்து விதிகள் மீறி அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலாளர் தற்போது அதிரடி உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது!
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு கூடுதல் ஆணையர் லோகநாதன் ஆய்வு மேற்கொண்ட இடங்களில் பாதுகாப்புக்கு இருந்த காவல் அதிகாரிகளை வாக்கி டாக்கி மூலம் அழைத்து பேசியுள்ளார். அப்போது கூடுதல் காவல் ஆணையர் என்று தெரியாமல் சில அதிகாரிகள் பேசியதாகவும் ,பணியில் சரியாக யாரும் இல்லை என்பதாலும் ஆத்திரமடைந்த கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன் ஐபிஎஸ் சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் ,உதவி ஆய்வாளர்கள் ,ஆய்வாளர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜியாள் சர்மாவிடம் கூறியதாகவும் உடனே பணியிட மாற்றம் ஆணை தயார் செய்த நிலையில் இந்த தகவல் முதல்வர் அவர்களுக்கு தெரியவர உடனே தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களை அழைத்து முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார். இதையடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னை காவல் ஆணையரை அழைத்து பணியிட மாற்றம் உத்தரவை ரத்து செய்யும் படியும் தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கு தெரியாமல் தன்னிச்சையாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் எந்த உத்தரவு போட்டாலும் தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வந்துள்ளது.
இது சம்பந்தமாக நமக்குத் தெரிந்த காவல் அதிகாரிகளிடம் விசாரித்த போது சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் உதவி ஆய்வாளர் ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து துறை மற்றும் அனைத்து துறையில் இருப்பவருக்கும் வேறு வேறு துறைக்கு மாற்றி உத்தரவு போட்ட கூடுதல் காவல் ஆணையரும் காவல் ஆணையரும் தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வருக்கு தெரிவிக்கவில்லை என்ற தகவலை தெரிவித்தார்.




இறையன்பு ஐஏஎஸ்
பணியிட மாற்றம் சம்பந்தமாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜியாள் சர்மா அவர்களை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.அதற்கு சென்னை காவல் ஆணையர் சென்னைக்கு நான் தான் டிஜிபி என்னுடைய கட்டுப்பாட்டில் தான் சென்னை இருக்கிறது அதனால்தான் நான் உத்தரவு போடுகிறேன் என்று சொன்னதாகவும் தகவல் !
சென்னை காவல் ஆணையர் சொன்ன பதில்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜியாள் சர்மாவு அவர்களுக்கும்( understand ) நல்ல உறவு இல்லாதது போல் தெரிகிறது என்று தகவல் அளித்தனர். அதுமட்டுமில்லாமல் சென்னைக்கு நான் தான் டிஜிபி என்றும் டிஜிபி சைலேந்திரபாபு விடம் சென்னை காவல் ஆணையர் கூறியதாகவும் தகவல் வந்துள்ள நிலையில் இரண்டு பேருக்கும் உறவு இல்லாமல் இருப்பது போல்தான் சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவித்தனர்!
எது எப்படியோ தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் ரவுடிகளுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார் .ஆகையால் தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் இரண்டு பேரும் தமிழகத்திற்கு இரண்டு கண்கள் போன்றவர்கள்.. இரண்டு பேரும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பது தான் நிதர்சனம்!