காவல் செய்திகள்

பெண் குழந்தை பெற விரும்­பா­த­வர்­களுக்கு சட்ட விரோதமாக 30 வருடங்களாக கருக்­கலைப்பு செய்­து வந்த  சோழவந்தான் தனியார் மருத்துவமனை பெண் உரிமையாளர் மற்றும்  அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர். நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள்!

பெண் குழந்தை பெற விரும்­பா­த­வர்­களுக்கு சட்ட விரோதமாக கருக்­கலைப்பு செய்­து கணி­ச­மான தொகை வசூ­லித்­து வந்த  தனியார் மருத்துவமனை உரிமையாளர் மற்றும்  அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர். அதிர்ச்சித் தகவல்.நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள்!



பெண் சிசுக் கொலையை தடுப்பதற்கு   போதிய நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள்!பெண் குழந்தைகளின் மீதான சமூகத்தின் பார்வை மாறவில்லையா!?

கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பெண் கருக்கொலை எனவும், பிறந்த பின் கொல்வது சிசுக் கொலை எனவும் கூறப்படுகிறது. பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது.


தமிழகத்தில் ஓராண்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 2021 ஏப்ரல் முதல் 2022 மே வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,01,332 மருத்துவ ரீதியிலான 20 வார காலம் உள்ள கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மதுரை மாவட்டம் முதலாவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கரு­வில் இருப்­பது ஆணா, பெண்ணா என்­பதை நவீன ‘ஸ்கேன்’ கருவி மூலம் முன்பே தெரிந்துகொண்டு, அதன் பின்­னர் இந்­தக் கருக்­க­லைப்­பு­கள் அரங்கேறி உள்­ளன.
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்கு அரசு போதிய நடவடிக்கை எடுக்க வில்லையா? பெண் குழந்தைகளின் மீதான சமூகத்தின் பார்வை மாறவில்லையா?
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து உள்ளதால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு பயப்படுகிறார்கள் ,அதனால் தான் பெண் சிசு கொலை பெற்றோர்களின் உதவியோடு நடைபெறுகிறது ,பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்றால் இந்திய நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசுகள் பலப்படுத்த வேண்டும்”

சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தானா என்பதை முன்கூட்டியே கண்டறிய மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சார்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார்.


காந்திமதி சோழவந்தானில் உள்ள விஜயலட்சுமி பாலீ கிளினிக்  தனியார் மருத்துவமனைக்கு

காயத்ரியை அழைத்துச்  சென்று ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது காயத்ரிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை என உறுதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு காந்திமதி  வீட்டிலேயே வைத்து காயத்ரிக்கு கருவில் இருக்கும் பெண் குழந்தையை கரு கலைப்பு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் பொழுது காயத்ரி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக தான் கருக்கலைப்பு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த காந்திமதி பெண் சிசு கருக்கலைப்பு செய்வதில் பெரும் தொகை கிடைத்து வந்ததால் தன்னுடைய அரசு செவிலியர் பணியை விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக கருவுற்ற பெண்களை நவீன ஸ்கேன் சென்டர்களுக்கு அழைத்துச் சென்று கருவில் பெண் சிசு இருப்பது  தெரிந்தவுடன்  கரு கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சிசு கருக்கலைப்பை செவிலியர் செய்திருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும் காந்திமதிக்கு உதவியதாக சோழவந்தான்  பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் விஜயலஷ்மி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சோழவந்தானில் உள்ள விஜயலட்சுமி பாலி கிளினிக்கு சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகள் சென்று சோதனை செய்துள்ளனர். ஜெயலட்சுமி கடந்த 30 ஆண்டுகளாக பெண் சிசு கரு கலைக்கு ஈடுபட்டு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கட்சி தகவலை தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் பெண் சிசு இருப்பதை கண்டுபிடிக்க பயன்படுத்திய நவீன ஸ்கேன் இயந்திரத்தை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சோழவந்தான் விஜயலட்சுமி பாலீ கிளினிக்  மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த விளம்பரப் போடு அகற்றப்பட்டு அந்த கட்டிடமே வெறிச்சோடி தற்போது உள்ளது.

மருத்துவமனை உரிமையாளர் விஜயலட்சுமி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து செவிலியர் காந்திமதி மற்றும் அவரது கணவர் இரண்டு பேரையும் அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் முதலாவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ பெண் சிசுக் கொலையை தடுப்பதற்கு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையா? பெண் குழந்தைகளின் மீதான சமூகத்தின் பார்வை மாறவில்லையா?
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து உள்ளதால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு பயப்படுகிறார்கள் ,அதனால் தான் பெண் சிசு கொலை பெற்றோர்களின் உதவியோடு நடைபெறுகிறது ,பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்றால் இந்திய நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசுகள் பலப்படுத்த வேண்டும்!
பெண் சிசுக்கொலை தடுப்பதற்காகத் தமிழக அரசு வகுக்கும் (தொட்டில் குழந்தை திட்டம் உட்பட) பல முன்னோடி நலத்திட்டங்களானது செயல்படுத்தல், விரிவுபடுத்தல், மேம்படுத்தலில் உள்ள பல சிக்கல்களின் காரணமாக காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடுகிறது. இந்நவீன கால சமூகத்தில் ஒரு பெண் குழந்தையின் கருத்தரிப்பு, பிறப்பு, படிப்பு, தொழில், திருமணம், பொது தனி வாழ்வில் சமநிலை போன்றவற்றுக்கு இன்னமும் போராட வேண்டிய சூழலில் இருப்பதைக் காணும் பொழுது பாரதி, காந்தி, பெரியார் போன்றோரின் கனவினை, கருத்துக்களைப் பெண் குழந்தை என்றால் செலவு, பாதுகாப்பின்மை போன்ற மடமை கருத்தியல் வீழ்த்திவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது.” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த காலத்திலும் பெண் குழந்தைகளை கருவில் அழிக்கும் செயலை செய்து வரும் அறிவற்ற மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்..
பெண் சிசு கொலையை தடுப்பதற்கு தான் சட்டம் இயற்றி உள்ளது அரசாங்கம் எனவே பெண் குழந்தைகள் மீது அக்கறை இல்லை என்று சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் அரசு போதுமான நடவடிக்கை எடுத்து வருவது தான் உண்மை. ஆனால் சமூகத்தின் பார்வை தான் இன்னும் மாறவில்லை. தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை பெருமையாக நினைக்கும் சமூகம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button