போதை ஊசி மாத்திரை சப்ளை செய்யும் மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் டாலர் சிட்டி திருப்பூர் மாவட்டம்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்
போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெருகிவரும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த திணறும் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்.
ஆபத்தான போதை தடை செய்யப்பட்ட இந்த மாத்திரை, அறுவை சிகிச்சை மற்றும் கிட்னி பெயிலியர் உள்ளிட்ட சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாத்திரையை உடைத்து பொடியாக்கி போதைக்கு பயன்படுத்துகின்றனர்.
இதற்கு அடிமையாகும் இளைஞர்களின் உடல் நிலை ஒரு கட்டத்தில், உயிரிழப்பு வரை கொண்டு போய் விடுகிறது.
நுாற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், இந்த போதைக்கு அடிமையாகியுள்ளனர்.
மனநோயாளி போல் கண்டு பிடிக்க முடியாத போதையில் சுற்றி வரும், பிள்ளைகளை பார்த்து, பெற்றோர்கள் வேதனையடைந்துள்ளனர் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின், பல பகுதிகளிலும், இக்கும்பல் போதை மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றை ஒரு கும்பல் சப்ளை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. மும்பையிலிருந்து ஆன்-லைன் மூலம், மருந்துகள் கொள்முதல் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை, 150 ரூபாய்க்கு வாங்கி, 1,500 ரூபாய் வரை விற்று லாபம் சம்பாதித்து வருகின்றனர். இவர்களுக்கு பின்னாடி
மிகப்பெரிய ‘நெட் ஒர்க்’ இதில் இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் போதை மாத்திரை ஊசிகளை தொடர்ந்து ஒரு மாபியா கும்பல் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் வேலை செய்யும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனையை ஒரு கும்பல் செய்து வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு வந்த புகார் அடிப்படையில்
காவல்துறையினரின் அதிரடி சோதனை நடத்தியதில் பதுக்கி வைத்திருந்த 800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தி மூன்று பேரை கைது செய்து மங்களம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர்
பல்லடத்தையடுத்த இடுவாய் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தொடர்ந்து மங்கலம் காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையிலான போலீசார் இடுவாய் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர் அதில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மலைச்சாமி 26 என்பவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் அவன் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது மேலும் அவனிடமிருந்து சுமார் 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் மலைச்சாமி இடம் விசாரணை மேற்கொண்டதில் மலைச்சாமியின் கூட்டாளியான இடுவம்பாளையத்தை சேர்த்த தினேஷ் குமார் கௌதம் ஆகியோர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரிய வரவே அவர்களை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 200 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவர்கள் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர் பல்லடம் அருகே சட்ட விரோதமாக 800 போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து, போதை ஊசி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, உடுமலை கொல்லன்பட்டறை, சாதிக்நகரை சேர்ந்த, ரகுமான், 26, காஜாமைதீன், 33, ஜெய்லானி காலனி, சதாம் உசேன், 25, அய்யலு மீனாட்சி நகர், ஷியாம், 24, மருந்துக்கடை உரிமையாளர், வெள்ளகோவில், முத்துார் ரோட்டைச்சேர்ந்த, அர்ஜூன்,25 ஆகியோரை கொண்ட கும்பலை நேற்று முன்தினம் போலீசார் கைது சஅவர்களிடமிருந்து, 478 மாத்திரைகள், 550 கிராம் கஞ்சா மற்றும் ஊசி, சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பின்பு அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது
அதேபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் போதை மாத்திரை போதை ஊசி புழக்கத்தில் இருப்பதை கண்டுபிடிக்க
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்த தனிப்படைகள் அமைத்து தீவிர சோதனைகளில் ஈடுபட்டால் மட்டுமே போதை மாத்திரை மற்றும் ஊசி விற்கும் கும்பல்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் முற்றிலும் போதை பொருள் விற்பனையை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்! இளைஞர்கள் வாழ்வை சீரழித்து வரும் போதை ஊசி சப்ளை செய்து வரும் ஒட்டுமொத்த கும்பைலையும் கைது செய்தால் மட்டுமே போதை என்ற இடத்திற்கு திசைமாறும் இளைஞர்களை பாதுகாக்க முடியும் என்பதுதான் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் போதை ஊசி மாத்திரை விற்கும் பாபியா கும்பல்களை கைது செய்து சாதித்து காட்டுவார்களா திருப்பூர் மாவட்ட காவல் துறையினர். பொறுத்திருந்து பார்ப்போம்.