மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தனிநபர் அல்லாத அனைத்து சமுதாய பணிகளும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் 100 சதவீதம் NAMS செயலி மூலமாகவே பதிவு செய்ய வேண்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு!
01/01/2023 முதல் தனிநபர் அல்லாத அனைத்து சமுதாயப் பணிகளும் செயலி மூலகமாகவே வருகை பதிவேடு பதிவு செய்வதன் அடிப்படையில் மட்டுமே ஊதியம் பணியாளர்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பணித்தளங்களில் NAMS app செயலி மூலம் இரண்டு நேரங்களிலும் வருகை பதிவேடு 100% எடுத்திட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள்மற்றும் பயணிகள் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மேலும் வெளிப்படைத்தன்மையாக பொருட்டு புகைப்படத்துடன் கூடிய புவிசார் புகைப்படங்கள் (Geo _Tagged photos) (NMMS app) செயலி மூலம் பதிவு விவரம் பணி தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!