மாவட்டச் செய்திகள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விராலிபட்டியில் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு!? தடுத்து நிறுத்தும் கிராம பொதுமக்கள்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு!?

ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் விராலிப்பட்டி கிராம பொதுமக்கள்


நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட வருவாய்த்துறை!?
மதுரை மாவட்டம்
வாடிப்பட்டி வட்டம் விராலிபட்டியில் சர்வே நம்பர் 127 (Viralipatty
Surve no 127. Ext. 10acre 97cents poramboke OADAI) இல் உள்ள 10 ஏக்கர் 97 சென்ட் ஓடை புறம்போக்கு நிலங்களை பிரமுகர் கறிக்கடை முருகன் ஆக்கிரமிப்பு செய்வதாக கிராம மக்களுக்கு தகவல் வந்ததாகவும் உடனே கிராம பொதுமக்கள் நேரில் சென்று புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்காமல் தடுத்து நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இது சம்பந்தமாக களத்தில் விசாரித்த போது நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் அந்த இடங்களில் மரக்கன்றுகள் நட சென்றுள்ளதாகவும் அப்போது புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகளின் நட விடாமல் தடுத்ததாகவும் மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( எம் எல் )புகார் மனு கொடுத்துள்ளதாக நமக்கு தெரிவித்தனர்.

ஆகவே மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மௌனம் காக்காமல் அசம்பாவிதம் நடக்கும் முன்பு காவல்துறை உதவியுடன் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button