மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடுக்கு உடந்தையாக தேனி மாவட்ட திட்ட இயக்குனர் (நிழல் ஆட்சியாளர் )தண்டபாணி !? ஊராட்சி மன்ற தலைவர்கள் குமுறல்!ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளரிடம் புகார்!


நிழல் ஆட்சியாளராக வலம் வரும் திட்ட இயக்குனர் மீது குற்றச்சாட்டு!
தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் சஜீவனா, திட்ட இயக்குனர் தண்டபாணி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகளும் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியத் தலைவர்கள் தேனி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தனர்.
மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப் படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின்(DISHA) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2022-23-ஆம் நிதியாண்டிற்கான நான்காம் காலாண்டிற்கான கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம்; திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல், தேசிய நெடுஞ்சாலை- மத்திய சாலைதிட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா – பொது தகவல் மையம், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், சான்சத் ஆதார்ஷ் – கிராம யோஜானா திட்டம்(SAGY), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (PMAY(G), தூய்மை பாரத இயக்கம் (கி) (SBM(G)), ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம்PMAGY), பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PMGSY), தீன்தயாள் அந்த்தோயா யோஜனா (DAY) – NRLM /தீன்தயாள் உபாத்தயா கிராமின் கௌசல்யா யோஜனா(DDUGKY), தூய்மை பாரத இயக்கம் – மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் (SBM), அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், பிரதம மந்திரியின் திருத்திய பயிர் காப்பீட்டுத் திட்டம், இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY), பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா (PMVY), நீர்வடிப் பகுதிகளில் பருவநிலை பாதுகாப்புத் திட்டம், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் (PMKSY), தேசிய விவசாய வளர்ச்சித் திட்டம் (NADP), வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(E-NAM), தேசிய நலக் குழுமம், பிரதம மந்திரி கனிஜ் சிட்ரா கல்யாண் யோஜனா(PMKKY), தேசிய சமூக பாதுகாப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார்.
மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் , திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) உட்பட நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 37 பேர் கொண்ட குழு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட இயக்குனர் , இவர்கள் இரண்டு பேரும் எடுக்கும் முடிவுதான் என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமாக நிழல் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் தண்டபாணி அவர்கள் தான் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது யார் யாருக்கு திட்டங்களை ஒதுக்குவது பற்றி முடிவு செய்வாராம். அவருக்கு சாதகமாக உள்ள நபர்களை மட்டுமே 1மாவட்ட தலைவர் முதல் ஊராட்சி 8 ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் 6 நகராட்சி தலைவர்கள் 5 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் இவர்கள் அனைவரும் நிழல் ஆட்சியர் தண்டபாணி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு சாதகமாக நடப்பவர்கள் மட்டுமே அருகில் வைத்துக் கொள்வாராம். 130 ஊராட்சி மன்ற தலைவர்கள் இருக்கும்போது ஐந்து ஊராட்சி மன்ற தலைவர்களை மட்டும் இந்த குழுவில் இணைத்து இருப்பது மீதமுள்ள 125 ஊராட்சி மன்ற தலைவர்களும் நிழலாச்சியர் தண்டபாணி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒரு ஊராட்சி ஒரு நகராட்சி ஒரு பேரூராட்சி குறைந்தது ஒரு லட்சம் வீதம் மாதம் சுமார் 5 கோடி வரை சன்மானமாக கிடைக்கிறது என்று அதிர்ச்சி தகவல்.
கொட்டக்குடி பஞ்சாயத்திற்குட்ட பகுதியில் மலை வாழ் இன மக்களுக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டாமல் ஒரு கோடி வரை பணத்தை ஒப்பந்த தாரர்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி முறைகேடு நடந்ததற்கு திட்ட இயக்குனர் தண்டபாணி உடந்தையாக செயல்பட்டதாக கடந்த ஆட்சியாளர் முரளிதரன் இருந்தபோது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிட்டத் தக்கது.ஆனால் இதுவரை அந்த முறைகேடு நடந்ததற்கு காரமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் பசுமை வீடு கட்டும் பணியும் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே போல் பேரூராட்சி நகராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் வேலைகளுக்கு ஒப்பந்தம் விடும் வேலைகளை பொறியாளர்கள் கவனித்து வருகிறார்கள். இதில் முக்கியமாக கமிஷன் தொகை அதிகமாக கொடுக்கும் நபர்களை மட்டுமே ஒப்பந்தத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஒப்பந்தமிடும் நடைமுறையை மாற்றி அமைத்து விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் முக்கியமாக ஆளுங்கட்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்று கூறுகிறார்கள். ஆனால் தேனி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த ஒப்பந்ததாரர்களுடன் நிழல் ஆட்சியாளராக இருக்கும் தண்டபாணி தொடர்பு வைத்துக்கொண்டு பினாமி பெயர்களில் ஒப்பந்தம் எடுத்து அந்த நபர்களுக்கு வேலை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது எப்படி சாத்தியம் என்று விசாரித்தால் இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தம் தருவதற்கு ஒப்பந்தம் கோரப்படுவதில் பத்து சதவீதம் குறைவாக ஒப்பந்தம் போடச் சொல்லி அவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கி வருவதாகவும் அப்படி வழங்கும் ஒப்பந்தத்திற்கு 15 சதவீதம் லஞ்சம் ஆகவும் கிடைப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அப்படி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் எடுத்து வேலை செய்யும் பல வேலைகள் தேனி மாவட்டத்தில் முழுமையாக இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாவட்ட ஆட்சியாளர் முரளிதரன் இருந்தபோது நிழல் ஆட்சியாளராக தண்டபாணி வலம் வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது புதிய ஆட்சியாளர் பொறுப்பேற்ற பின்னரும் தொடர்ந்து நிழல் ஆட்சியாளராக வலம் வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் மூன்று பேரும் நேர்மையான அதிகாரியை தேனி மாவட்டத்திற்கு நியமித்து அங்கு நடக்கும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களை ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளை அன்றும் இன்றும் உள்ள உயர் அதிகாரிகள் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிழல் ஆட்சியாளராக வலம் வரும் திட்ட இயக்குனர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதில் என்ன வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தேனி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 130.
போடிநாயக்கனூர் 15 பஞ்சாயத்து
(சில்லு மரத்துபட்டி)
2. தேனி 18 பஞ்சாயத்து ( அரண்மனை புதூர்)
3. உத்தமபாளையம் 13 பஞ்சாயத்து (கோகிலாபுரம்)
4. பெரிய குளம் 17 பஞ்சாயத்து (முதலைக்கம்பட்டி)
5..ஆண்டிபட்டி 30 பஞ்சாயத்து (கோத்தலுத்து)
6. சின்னமனூர். 14 பஞ்சாயத்து
7. மயிலாடும்பாறை 18 பஞ்சாயத்து
8. உத்தமபாளையம் 13 பஞ்சாயத்து
மொத்தம் 130
இதில் ஐந்து பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 125 பஞ்சாயத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள்