வசூல் ராஜாவாக மாறிய இளையராஜா மீது மோசடி வழக்கு!? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்!
அன்னக்கிளி திரைப் படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் தமிழ் திரைப்படம் எடுத்த ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் இசையின் காப்புரிமை (copyright rights act)வேதனையால் தற்போது தமிழ் திரைப்பட வட்டாரத்தில் இளையராஜாவின் மீது கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
தயாரிப்பாளர்கள் திரைப்படத்தை எடுத்து முடித்து அதன் பின்பு அந்த திரைப்படத்தை திரையரங்கிற்கு கொண்டு செல்வது வரை ஒரு பெண் பத்து மாதம் தன் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுப்பது போல் அந்த வலியை தாங்கிக் கொண்டு வெளியே தெரியாமல் தன் குழந்தையைப் போல் எடுத்த திரைப்படத்தை பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் அந்தத் திரைப்படத்திற்கு இசை ஒரு அங்கமாக இருந்த நேரம் அதை பயன்படுத்தி மிகப்பெரிய சம்பளமாக தயாரிப்பாளரிடம் பெற்றுக் கொண்டு இளையராஜா தன்னை திரையுலகில் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டார்.
தற்போது இளையராஜா இசையமைத்த அனைத்து திரைப்படத்தின் பாடலின் ஆடியோ உரிமம் அனைத்தையும் தனக்கே சொந்தம் என்று நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்று இருப்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது என்கிறார்கள் இளையராஜா வைத்து இசையமைத்த தயாரிப்பாளர்கள்.
தற்போது இளையராஜாவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் சென்று இளையராஜா மீது மோசடி வழக்கு தொடர இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கங்கள் பிரிந்து உள்ள நிலையில் அனைத்து தயாரிப்பாளர் சங்கம் ஒன்று கூடி இந்த பிரச்சனையை முடிவுகட்ட தற்போது இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ இனிமேலாவது திரைப்பட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப் படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கும் மட்டுமே சொந்தம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் மட்டுமே தயாரிப்பாளர்கள் இதுபோல் பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம்.