அரசு சார்பாக நடத்தப்பட்ட புத்தகத் திருவிழாவில் தற்போது மக்கள் பிரதிநிதி இல்லாதவர்களை மேடையில் அமரவைத்த தேனி மாவட்ட ஆட்சியர் மீது விமர்சனம்!
அரசு சார்பாக நடத்தப்பட்ட புத்தகத் திருவிழாவில் மக்கள் பிரதிநிதி இல்லாதவர்களை மேடையில் அனுமதித்த தேனி மாவட்ட ஆட்சியர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
அரசு சார்பாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியா
கட்சி சார்பாக நடத்தப் பட்ட புத்தகக் கண் காட்சியா!? என்று
சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மக்கள் பிரதிநிதி இல்லாத கட்சி சார்ந்தவர்களை அரசு விழா மேடைகளில் உட்கார வைத்து முன்னிலைப் படுத்திப் பேச வைப்பதை இனிமேலாவது தவிர்ப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!?
தேனி மாவட்டத்தில் முதல் முறையாக அரசு சார்பாக தேனி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் புத்தக கண்காட்சி திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தப் புத்தக கண்காட்சி தேனி பழனி செட்டி பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் : 3.3.23 முதல் 12.3.23 வரை 10 நாட்கள் நடைபெறும்
இதனை ஏற்பாடு செய்த தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் ஐந்து லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவ மாணவிகளை 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களை தினம் தோறும் குலுக்கல் முறையில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவை .மாலை 5 மணிக்கு புத்தகத் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அமைச்சர் பெரியசாமி அவர்கள் ரிப்பன் பெட்டி புத்தக திருவிழா கண்காட்சியை திறந்து வைத்தார்
அதன் பின்பு பதிப்பகங்கள் சார்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அமைச்சர் பார்வையிட்டார்.
ஆனால் தேனி மாவட்ட ஆட்சியர் கூறியது போல ஐந்து லட்சம் புத்தகங்கள் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் புத்தக விற்பனைக்கு அமைத்திருந்த ஒரு சில புத்தகம் விற்பனை செய்யும் ஸ்டால்கள் காலியாக இருந்ததாகவும் சமூக ஆர்வலர்கள் இதற்குக் காரணம் என்னவென்றால் 10 நாட்களுக்கு முன்புதான் இந்த புத்தக திருவிழா நடத்த திட்டமிட்டதாகவும் அதனால்தான் இந்த புத்தகத் திருவிழாவிற்கு புத்தகப்பதிப்பகம் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது புத்தக விற்பனை செய்ய ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வந்துள்ளது.
அதன் பின்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நூலக அலுவலர் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் இருந்தனர்.
ஆனால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தற்போது திமுக கட்சி தேனி வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் மேடையில் அமைச்சர் அருகே இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதன் பின்பு அமைச்சர் அவர்கள் பேசி முடிந்தபின் அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக கட்சி தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மேடையில் தன்னுடைய கருத்துக்களை உரையாற்றினார்.
அரசு சார்பாக தேனி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடக்கும் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் தங்க தமிழ்ச்செல்வன் பெயர் இல்லாத நிலையில்
தேனி மாவட்ட ஆட்சியர் தங்கத் தமிழ்செல்வனை மேடையில் அமர வைத்து பேச அனுமதித்தார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏனென்றால் தேனி மாவட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேர் இருக்கும்போது தங்க தமிழ்ச்செல்வனுக்கு மட்டும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஏன் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இதுபோன்று அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் கட்சி சார்ந்தவர்களை மேடையில் அமர வைக்கும் போது மற்ற கட்சி சார்ந்தவர்களையும் அழைத்து மேடையில் உட்கார வைக்க வேண்டும் .இல்லை என்றால்
இது போன்ற அரசு நிகழ்ச்சிகளில் தேவையில்லாமல் ஒரு சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் இதுபோன்று நடந்த ஒரு சில அரசு நிகழ்ச்சிகள் பாதியிலேயே நின்று போனதை நாம் மறக்கவும் முடியாது . பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் அரசு நிகழ்ச்சிகளில் தற்போது மக்கள் பிரதிநிதிகளாக இல்லாத கட்சி சார்ந்தவர்களை மேடையில் உட்கார வைப்பதை தேனி மாவட்ட ஆட்சியர் தவிர்க்க வேண்டும் . முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பதில் எந்த தவறும் இல்லை அவர்களை மேடையில் அமர வைப்பதால் தான் தற்போது கேள்வி எழுந்துள்ளது. ஆகவே வரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படும்போது அவர்களுக்கான மரியாதை கொடுத்து மேடைக்கு கீழே தனியாக அவர்களை அமர வைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.