அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு சட்ட விரோதமாக கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தல்!
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை மற்றும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகார்கள்! நடவடிக்கை எடுப்பாரா குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி!?
ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தும் உடுமலை தாராபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள்!
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை மற்றும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகார்கள்! நடவடிக்கை எடுப்பாரா குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி!?
திருப்பூர் மாவட்டம் உடுமலை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இடைத்தரகர்களை வைத்து வைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் ரேஷன் அரிசி வாங்கி கேரள கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தி வருவதை கண்டுகொள்ளாமல்
மாதம் பல லட்ச ரூபாய் திருப்பூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கல்லாகட்டி வருவதாகவும்
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி. நடவடிக்கை எடுப்பாரா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு 2023 பிப்ரவரி மாதம்
சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை
கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் 18005995950 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் திருப்பூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனை சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் ஆகிய இடங்களில்
அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 18005995950 இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உதவ வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதை எல்லாவற்றையும் திருப்பூர் மாவட்டம் உரிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் காற்றில் பறக்க விட்டு சோதனை என்ற பெயரில் கண்டுடைப்பு நாடகம் நடத்தி கல்லா கட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலவசமாக வழங்கி வரும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு கேரள மாநிலத்தில் விற்பதற்கு ஒரு கும்பல் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறது அதுவும் குறிப்பாக தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள நகரங்களில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாகவும் மாத ஒரு முறை சோதனை என்ற பெயரில்
ரேஷன் அரிசி கடத்தும் நபர்களை கையும் களவுமாக உணவு தடுப்பு பிரிவு காவல் துறையினர் பிடித்து ஒரு சிலர் மீது வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அவர்களை கைது நடவடிக்கை எடுத்து கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தாலுகாவில், 183 ரேஷன் கடைகளில், 1.10 லட்சம் ரேஷன் கார்டுகளும், மடத்துக்குளம் தாலுகாவில், 63 ரேஷன் கடைகளில், குறைந்தது 50 ஆயிரம் பேர் அரிசி அட்டைதாரர்களாக இருக்கிறார்கள்.
உடுமலை, மடத்துக்குளம் பகுதி ரேஷன் கடைகளில்
உடுமலையில்,
10 பேர் கொண்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் செயல்படுகிறது.
பிரதான ரேஷன் கடைகளில், தங்கள் ஆட்களை நியமித்துள்ளனர். ரேஷன் அரிசி வாங்க விருப்பமில்லாத பொதுமக்கள் வந்தால், அவர்கள் பில்லில் அரிசியையும் சேர்க்கப்படுகிறது. பின்னர் அந்த அரிசியை அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு குறைந்த விலைக்கு டன் கணக்கில் வாங்கும்
ரேஷன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு
கேரளாவிற்கு கடத்திச் சென்று அதிகப் விலைக்கு
விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல்லடத்திலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் இருக்கும் அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றனர் இதில் ஒரு சில அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் போதைக்கு அடிமையாகி இருக்கும் நபர்களை குறிவைத்து அந்த இளைஞர்களை மூளை சலவை செய்து தங்கள் செய்யும் கடத்தல் தொழிலுக்கு உடன் வைத்துக் கொண்டு அவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை கொடுத்து வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி சட்ட விரோதமாக
அரிசி ஆலைகளில் பதுக்கி வைத்து டன் கணக்கில் சேர்ந்தவுடன் அந்த அரிசியை பாலிஷ் செய்து கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ரேஷன் அரிசி கேரளா கர்நாடகாவிற்கு கடத்திச் செல்வதாக
திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர்களுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தால் சோதனை என்ற பெயரில் இருசக்கர வாகனம் டாட்டா ஏசி வாகனத்தில் ரேஷன் அரிசி எடுத்துச் செல்லும் நபர்களை பிடித்து கடத்திச் சென்ற ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருவது வழக்கமாக இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும் நிரந்தரமாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இதுவரை திருப்பூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கடத்தலில் ஈடுபட்டு வரும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை கையூட்டாக பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு சக்கர வாகனத்தில் 100 கிலோ முதல் 500 கிலோ வரை அரிசி கடத்தும் நபரிடம் மாதம் 50 ஆயிரம் டாட்டா ஏசி ஏசி வாகனத்தில் ஆயிரம் கிலோ முதல் 2000 கிலோ வரை ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மாதம் ஒரு லட்சம் ஈச்சர் போன்ற வேன்களில் 2000 முதல் 4000 வரை அரிசி கடத்தும் நபர்களிடம் மாதம் இரண்டு லட்சம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மாதம் 5 லட்சம் வரை கப்பம் கட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
எது எப்படியோ திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையில் நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே ரேஷன் அரிசியை பாலிஷ் போட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்திச் செல்லும் அரிசி ஆலை உரிமையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற ரேஷன் அரிசி கடத்தலை ஓரளவு தடுத்து நிறுத்த முடியும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். ஆகையால் திருப்பூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்!
உணவு தடுப்பு பிரிவு காவல் துறையினர் உடந்தையாக செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் அனைத்து சாமானிய பொதுமக்களிடம் இருந்து வருகிறது.
அரசு மூலமாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் அரசு நெல்லை அரைத்து
அரிசியாக கொடுப்பதற்கு.
ஒப்பந்தம் போட்டு அரைத்துக் கொடுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் இடைத்தரகர்களை வைத்து
அந்த மில் உரிமையாளரே இதுபோல் புரோக்கர் வைத்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களை வைத்து ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி வைத்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது பல்லடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான ரேஷன் அரிசி தினந்தோறும் வாங்கப்படுகிறது இங்கு வாங்கப்படும் அரிசியை வெளி
மாநிலங்களுக்கு அதிகப்படியான விலைக்கு விற்று கோடிக்கணக்கில் வருமானம் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது
கூட்டுறவுத்துறை மூலம் அரசுக்கு அரைத்துக் கொடுக்கும் அரிசி ஆலைகளின் சங்கம் என்ற பெயரில் அரசையும் அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றி பல கோடி சம்பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது
இதை தடுக்க வேண்டிய .திருப்பூர் மாவட்ட .உணவு கடத்தல் தடுப்பு பிரிவு.கணிசமான ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு மில் அதிபர்களுக்கு.
தாரை வார்த்து கொடுத்து விட்டார்களோ.பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விசாரணை செய்வார்களா அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை திருடுபவர்களை தடுத்து நிறுத்துவார்களா ? அல்லது விழித்துக் கொள்ளுமா? தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம்